ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் ஆக வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கெசெட் அதிகாரிகள் இல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி,ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் ஆக வழங்க மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம்,11.56 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும்,இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில்:
“மத்திய அமைச்சரவை, தகுதிவாய்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு (RPF/RPSF பணியாளர்கள் தவிர) FY20-21 க்கான 78 நாட்கள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸை அங்கீகரிக்கிறது. இந்த முடிவால் சுமார் 11.56 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயனடைய வாய்ப்புள்ளது”,என்று தெரிவித்துள்ளார்.
unknown node