கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்..!!குடியரசுத் தலைவர் அறிவிப்பு
- கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் (வயது 63) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வருகிறார்.
- கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார் என்று குடியரசுத் தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மனோகர் பாரிக்கர் 2017 மார்ச் 14-ஆம் தேதி முதல் கோவா மாநில முதல்வராகப் பதவி வகித்து வந்தார்.
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் (வயது 63) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார்.அவரால் முதல்வர் பணிகளையும் கவனிக்க முடியவில்லை.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கணைய நோய்க்கு சிகிச்சை பெற அமெரிக்கா சென்றார். அங்கு இரு மாதங்கள் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர் ஜூன் மாதம் நாடு திரும்பினார். மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற பாரிக்கர், சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார்.
பின்னர் டெல்லி மற்றும் மும்பை என சிகிச்சை பெற்று வந்தார்.இதைத் தொடர்ந்து கோவா திரும்பிய அவர் அரசுப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
Extremely sorry to hear of the passing of Shri Manohar Parrikar, Chief Minister of Goa, after an illness borne with fortitude and dignity. An epitome of integrity and dedication in public life, his service to the people of Goa and of India will not be forgotten #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) March 17, 2019
இந்நிலையில் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார் என்று குடியரசுத் தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோவா முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.