காதலனை நான் கொலை செய்யவில்லை..! குளிர்பான காதலியின் அந்தர் பல்டி வாக்குமூலம்.!

Default Image

நான் ஷாரோனை கொலை செய்யவில்லை. காவல்துறையினர் வேண்டுமென்றே இந்த வழக்கை என்மீது திணித்துள்ளனர். என கேரள ‘குளிர்பான வைரல் வீடியோ’ காதலி கிரீஷ்மா நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேரளா மற்றும் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம் என்றால் தன்னுடைய காதலனுக்கு கேரள பெண் குளிர்பானத்தில் எதோ கலந்து கொடுத்து குடிக்க சொல்வதும், அதனை குடித்த பின்னர் அந்த காதலன் உயிரிழந்த சம்பவம் தான். விசாரணையில் அதற்கு முன்னரே அந்த காதலனுக்கு கஷாயத்தில் விஷம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

 அந்த காதலன் கேரள மாநிலம் பாறசாலை மூல்யங்கரையைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ஷாரோன்ராஜ் ஆவார். இவரை கொலை செய்த வழக்கில் தான் காதலி கிரீஷ்மா கைது செய்யப்பட்டார். மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தாய் சிந்து மற்றும் தாய்மாமா நிர்மல் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிரீஷ்மாவுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் ஆகியுள்ளது. உடனே ஷாரோன்ராஜை கடந்த அக்டோபர் மாதம் தனது வீட்டுக்கு கிரீஷ்மா வரவழைத்துள்ளார். அப்போது ஒரு கஷாயத்தில் விவசாயத்துக்கு பயன்படுத்தும் பூச்சிமருந்தை கலந்து கொடுத்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் தான், கிரீஷ்மா, காதலன் ஷாரோனுக்கு ஜூஸ் கொடுத்துள்ளார். அந்த வீடியோ தான் இணையத்தில் வெகு வைரலாக பரவி வந்ததது. அந்த ஜூஸில் தான் காய்ச்சலுக்கான டோலோ மாத்திரைகளை அதிக அளவில் கலந்துகொடுத்ததாக கிரீஷ்மா ஒப்புக்கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து தான் அக்டோபர் 25-ம் தேதி ஷாரோன் உயிரிழந்தார்.
இந்த வழக்கை திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.  இருவரும் படித்த கல்லூரிகள், சுற்றித்திரிந்த இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கின்ற கிரீஷ்மா, கேரள நீதிமன்றத்தில், நான் ஷாரோனை கொலை செய்யவில்லை. காவல்துறையினர் வேண்டுமென்றே இந்த வழக்கை என்மீது திணித்துள்ளனர். போலீஸார் என்னை மிரட்டி ஒப்புக்கொள்ள வைத்தனர். என ஆதாரங்களை அவர்கள் பொய்யாக உருவாக்கினர். என கிரீஷ்மா அந்தர் பல்டி வாக்குமூலம் அளித்தார்.

இது குறித்து பேசிய காவல்துறையினர், குற்றவாளிகள் போலீசரிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டு பின்னர் மறுப்பது சகஜம் தான். ஆனால், கிரீஷ்மாவுக்கு எதிரான ஆதாரங்கள் சரியாக இருக்கிறது என கூறினர்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்