காதலனுடன் சண்டை ! ரயில் முன் பாய்ந்த காதலி.. பத பதைக்கும் வீடியோ !

Girl Jumps in Train

உத்தரபிரேதேசம் : ஆக்ராவில் இளம் பெண் ஒருவர் ஓடும் ரயில் முன் பாய்ந்த சிசிடிவியில் பதிவான நெஞ்சை பதபதைக்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த திங்கள்கிழமை (மே-27) அன்று காலை 11 மணி அளவில், உத்திரபிரதேசம் மாநிலம், ஆக்ராவில் உள்ள ராஜா கி மண்டி என்ற ரயில் நிலையத்தில் இந்த அதிர்ச்சியான சம்பவம் அரங்கேறி உள்ளது. அந்த ரயில் நிலையத்தின் நடைமேடை-1ல் ஒரு காதல் ஜோடிகள் பேசி கொண்டு இருப்பார்கள்.

அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட காரணத்தால் அந்த இளம் பெண் ரயில் வருவது தெரிந்தும் அந்த தண்டவாளத்தில் குதித்து காதலனுடன் தகராறில் ஈடு படுவார். அப்போது ரயில் அருகில் வருவது தெரிந்தவுடன் நடைமேடை அருகில் வந்து நிற்பார். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த இளம் பெண்ணை தண்டவாளத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இழுத்து சென்றுவிடும்.

இந்த அதிர்ச்சியான சம்பவம் அந்த நடைமேடை-1ல் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. 33 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில் அந்த பெண் ரயில் வருவது தெரிந்தும் நடைமேடையிலிருந்து தண்டவாளத்தில் குதிப்பதை காணலாம். காதலுடன் வாக்கு வாதத்தில் இருந்த அந்த பெண்ணை கேரளா ரயில் இழுத்து செல்வதையும் அந்த வீடியோவில் நாம் காணலாம்.

மேலும், இது நடந்த சிறுது நேரத்தில் அந்த காதலன் அங்கிருந்து தப்பி ஓடியிருப்பார், அந்த காட்சிகளும் கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த சம்பவத்துக்கு பிறகு, படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் அந்த பெண்ணை ரயில்வே துறை காவல் அதிகாரிகளால் சிகிச்சைக்காக எஸ்என் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த பெண் யார் என்ற அடையாளத்தை கண்டறியும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
veera dheera sooran S. J. Suryah
Nagpur Violence
chennai budget
hardik pandya and suryakumar yadav
Puducherry CM Rangasamy
RRB alp exam