டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தற்பொழுது வரை தொடர்ந்து வரும் நிலையில், மூன்றாவது நாளாக போராட்டம் நடைபெறும் முக்கியமான பகுதிகளில் இரவு 11 மணி வரை இணைய சேவை துண்டிப்பை நீட்டித்து உத்தரவு.
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள், மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டம் கடந்த குடியரசு தினத்தன்றிலிருந்து வன்முறையாக வெடித்தது, இதில் பல விவசாயிகளும் காவலர்களும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த 29 ஆம் தேதியே ஹரியானா, பஞ்சாப் மற்றும் டெல்லி உள்ளிட்ட போராட்டம் நடைபெறும் இடங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்பொழுது டெல்லியில் போராட்டம் நடைபெறும் இடங்களான சிங்கு, காசிப்பூர் மற்றும் திக்ரி ஆகிய இடங்களில் இன்று இரவு 11 மணி வரை இணைய சேவை துண்டிப்பை நீட்டித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.