டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தற்பொழுது வரை தொடர்ந்து வரும் நிலையில், மூன்றாவது நாளாக போராட்டம் நடைபெறும் முக்கியமான பகுதிகளில் இரவு 11 மணி வரை இணைய சேவை துண்டிப்பை நீட்டித்து உத்தரவு. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள், மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டம் கடந்த குடியரசு தினத்தன்றிலிருந்து வன்முறையாக வெடித்தது, இதில் பல விவசாயிகளும் காவலர்களும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், […]
பயிர்க் கடன் தள்ளுபடி, மானியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்கள் அகில விவசாயிகள் சங்கம் சார்பில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆசிக் முதல் மும்பை வரையிலான 200 கிமீ பேரணியாக சென்றனர். இந்நிலையில் ஆளும் பிஜேபி அரசுடன் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளின் பேச்சு வார்த்தை நடைபெற்றது.பின்னர் விவசாயிகளின் அத்தனை கோரிக்கைகளையும் பிஜேபி அரசு ஏற்றுகொண்டது. பின்னர் விவசாயிகள் அனைவர்க்கும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மாநிலஅரசின் சார்பில் […]
மகாராஷ்டிரத்தை தொடர்ந்து பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் பெரும் கிளர்ச்சி நடத்த விவசாயிகள் தயாராகி வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் மார்ச் 15ஆம் தேதி லக்னோ நோக்கி விவசாயிகள் அணிவகுக்க உள்ளனர். “சலோ லக்னோ” என்கிறபெயரில் நடைபெறவிருக்கும் இந்த அணிவகுப்புக்கான தயாரிப்புகளில் விவசாயிகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.மார்ச் 15ல் லக்னோவில் நடைபெறும் பேரணியில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா, சிபிஎம் அரசியல் […]
நாகைப்பட்டினம் : வேதாரண்யம் விவசாயிகளின் 22நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். விவசாயிகளுடன் வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மைதுறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து விவசாயிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.