விலைப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க கோரி டெல்லியில் நாளை மறுநாள் விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளனர். இதற்காக அவர்கள் நாளை முதல் அரியானாவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு செல்ல உள்ளனர். உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த 200 சங்கங்கள் விடுத்த அழைப்பை ஏற்று விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட்டு செல்கின்றனர். டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதை தடுக்க ஹரியானா மாநில எல்லையில் உள்ள சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். உத்தரபிரதேசம் […]
சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் மோன் மாவட்டத்தில் இணைய மற்றும் குறுஞ்செய்தி சேவை முடக்கப்பட்டுள்ளது. நாகாலாந்தில் உள்ள மோன் மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று மாலை பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடத்தினர். அப்போது அருகில் உள்ள நிலக்கரித் தொழிற்சாலையில் வேலையை முடித்து விட்டு அபோகுதியில் உள்ள கிராம இளைஞர்கள் பிக்-அப் டிரக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் தவறுலதாக பாதுகாப்புப் படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. […]
ஆகஸ்ட் 28 ஆம் தேதி விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கர்னாலில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரியும், ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி இந்த விவசாயிகள் மீது போலீசார் தடியடி […]
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தற்பொழுது வரை தொடர்ந்து வரும் நிலையில், மூன்றாவது நாளாக போராட்டம் நடைபெறும் முக்கியமான பகுதிகளில் இரவு 11 மணி வரை இணைய சேவை துண்டிப்பை நீட்டித்து உத்தரவு. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள், மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டம் கடந்த குடியரசு தினத்தன்றிலிருந்து வன்முறையாக வெடித்தது, இதில் பல விவசாயிகளும் காவலர்களும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், […]
நெட்வொர்க் கிடைக்காததால் மலையில் குடில் அமைத்து படித்த மாணவிக்கு பிரதமர் சிறுமியின் வீட்டில் இணையவசதி வழங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள சிந்துதுர்க் பகுதியை சேர்ந்தவர் ஸ்வப்னாலி. இவர் கோபிநாத் கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஸ்வப்னாலி வசிக்கும் இடத்தில் செல்போன் நெட்வொர்க் இல்லாத காரணத்தால் அவர் அருகிலுள்ள மலையில் செல்போன் சிக்னல் கிடைக்கும் இடத்தில் குடில் அமைத்து […]
கென்யாவில் உள்ள ரிஃப்ட் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பலூனை பயன்படுத்தி அதிவேக இன்டர்நெட் வழங்கும் திட்டத்தை ஆல்ஃபாபெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் இணையதள வசதி இல்லாத இடங்களே இருக்காது. செல்போன் டவர் மூலம் நகரங்களில் வசிக்கும் மக்கள் இணையதள வசதிகளை பெறுகின்றனர். ஆனால் மலைகிராமங்களிலும், பள்ளத்தாக்கு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இணையதள வசதி கிடைப்பது கடினம். அங்கெல்லாம் செல்போன் டவர் வைப்பதற்கு அதிக செலவாகும். அந்த வகையில் அதுபோன்ற பகுதிகளில் உள்ளவர்கள் இணையதள வசதியை பெற […]
சமீபத்தில் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிராக வதந்திகள் பரவி வன்முறைகள் வராமல் இருக்க இணையதள சேவை முடக்கப்பட்டது.145 நாட்களுக்கு பிறகு மீண்டும் இணையதள சேவை வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ ரத்து எனவும் , ஜம்மு காஷ்மீர் , லடாக் இரண்டும் யூனியன் பிரதேசமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு […]