திருவிழாவில் மதம் பிடித்த யானை-பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்..!

கேரளா மாநிலம் திருச்சூர் ஆராட்டுபுழா கோயில் திருவிழா சிறப்பாக நடைபெற்று கொண்டிருந்தது. இந்த திருவிழாவில் 3 யானைகள் கொண்டுவரப்பட்டு சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்தன. இந்த யானைகளில் திடீரென ஒரு யானை மதம் பிடித்து மற்றொரு யானையை முட்டியது. இதனால் மற்ற 2 யானைகளும் மிரண்டு வெவ்வேறு திசைகளில் ஓடியதால் திருவிழாவிற்கு கூடியிருந்த பொதுமக்களும் பயந்து அலறியடித்து ஓடத்தொடங்கினர்.
பயந்து ஓடியதில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் குழிகளுக்குள் விழுந்து படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து ஆக்ரோஷமாக காணப்பட்ட யானைகளை பாகன்கள் கடும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு சமாதானப்படுத்தினர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை போலீசார் யானைக்கு மதம் பிடித்ததற்கான காரணம் குறித்தும் யானை முறையான மருத்துவ பரிசோதனைக்கு பின்பு தான் கோயில் திருவிழா நிகழ்வுக்கு கொண்டு வரப்பட்டதா..? என்றும் அதற்கான மருத்துவ சான்றிதழ்கள் உள்ளதா..? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025