கென்யா : மனிதர்களைப் போலவே யானைகளும் மற்ற யானைகளை பெயர் சொல்லி அழைப்பதாக கென்ய நாட்டின் ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. ஆம், மனிதர்கள் நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயரை வைத்திருப்போம், அதேபோல் யானைகள் மற்ற யானைகளை அடையாளம் காணவும் அழைக்கவும் பெயர்களைப் போலவே செயல்படும் குறிப்பிட்ட குரல்களைப் பயன்படுத்துகின்றன. கென்யாவில் உள்ள ஆப்பிரிக்க சவன்னா யானைகளைக் கண்காணிக்கும் கொலராடோ ஸ்டேட் யுனிவர்சிட்டி (யுஎஸ்) டேவிட் மைக்கேல் பார்டோ, கர்ட் ஃப்ரிஸ்ட்ரப் மற்றும் ஜார்ஜ் விட்டெமியர் ஆராய்ச்சியாளர்களால் இந்த […]
அனிமல் வீடியோ : சமூக வலைத்தளங்களில் அடிக்கடி விலங்குகள் தொடர்பாக நாம் வேடிக்கையாக பார்க்க கூடிய வீடியோக்கள் வைரலாகி வருவது வழக்கமானது. ஒரு சில வீடியோக்கள் வேடிக்கையாக இருந்தாலும், பரிதாபமாகவும் இருக்கும். அப்படி தான் தற்போது அடர்ந்த காட்டிற்குள் சிங்கம் ஒன்றும் யானை ஒன்றும் சண்டைபோட்டுக்கொள்ளும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வீடியோவில் ” ஒரு யானையை சிங்கம் ஒன்று தும்பிக்கையை பிடித்துக்கொண்டு தாக்க முயற்சி செய்கிறது. ஆனால், யானையின் தோல் மிகவும் கடினமாக இருப்பதால் சிங்கத்தால் அதனை […]
அசாம் : புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுப்பவர்கள் அடிக்கடி நம்மளால் நினைத்து பார்க்க முடியாத வகையில், வனவிலங்குகளை வீடியோ எடுத்து அந்த வீடியோவை, தங்களுடைய சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு நம்மளை பிரமிக்க வைத்து விடுவார்கள். அப்படி தான், பிரம்மபுத்திரா நதியியில் கூட்டமாக யானைகள் ஆற்றை கடந்து செல்வதை ட்ரோன் கேமரா மூலம் புகைப்படக் கலைஞர் சச்சின் பரலி வீடியோ எடுத்து வெளியீட்டு இருக்கிறார். அஸ்ஸாமில் உள்ள ஒரு முக்கிய நதி துறைமுகமான நிமதி காட்டில் இருக்கும் பிரம்மபுத்திராவின் […]
கோவை அருகே ஆபத்தான முறையில் யானையை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது வனத்துறை. பாதுகாக்கப்பட்ட நவமலை பகுதியில் காரை ஒட்டி சென்ற பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக இளைஞர், இளம்பெண் பாசறை செயலாளர் மிதுனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உயர் ஒளிவிளக்கு (ஹை பீம் லைட்) பொருத்திய வாகனத்தை மலைச்சாலையில் இயக்கி, அப்பகுதியில் வந்த யானையை ஆபத்தான முறையில் விரட்டியதாக வனத்துறை குற்றச்சாட்டியுள்ளது. மலைச்சாலையில் உயர் ஒளியுடன் வந்த வாகனத்தை கண்டு […]
நடைபெயர்ச்சிக்கு அழைத்து சென்றபோது மயங்கி விழுந்து கோயில் யானை லட்சுமி உயிரிழப்பு. புதுச்சேரியில் பிரசக்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி (32) திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. அதிகாலையில் யானை லட்சுமியை பாகன் சக்திவேல், நடைபெயர்ச்சிக்கு அழைத்து சென்றபோது மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. யானை லட்சுமி இறப்பு காரணமாக மணக்குள விநாயகர் கோயில் நடை சாத்தப்பட்டது. மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் […]
அம்மா யானையிடம் கோபப்பட்டு ரோட்டில் அழுது புரளும் யானை குட்டி.. வைரலாகும் வீடியோ! குரங்குகள் மற்றும் டால்பின்கள் போன்றே யானைகளும் புத்திசாலித்தனமான உயிரினங்கள். யானைகளும் மனிதர்களைப் போலவே சிக்கலான எண்ணங்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டவை. யானைகள் என்றாலே, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து விரும்பக்கூடிய விலங்குகளில் ஒன்று. அதிலும் யானைக்குட்டி என்றால் அவ்வளவுதான், அவை தூங்கினாலும், குளித்தாலும், சாப்பிட்டாலும் அல்லது விளையாடினாலும் வரம்பற்ற இன்பத்தை அள்ளித் தரக்கூடியது. அந்தவகையில் […]
யானை ஒன்று தனது முதுகில் ஏற்பட்ட அரிப்பை போக்குவதற்காக காரின் மீது ஏறும் வேடிக்கையான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பொதுவாக மனிதர்களின் முதுகில் ஏற்படும் அரிப்பை அவர்கள் தங்கள் கைகளை பயன்படுத்தி போக்கிக்கொள்கின்றனர். அதே போல் விலங்குகளுக்கு அரிப்பு ஏற்பட்டால் ஏதேனும் ஒரு மரத்தையோ அல்லது ஏதேனும் பெரிய பொருளின் மீது சாய்ந்து அரிப்பை போக்கி கொள்ளும். அது போல் யானை ஒன்று தனது முதுகில் ஏற்பட்ட அரிப்பை போக்குவதற்காக சாலையில் சென்றுக் கொண்டிருந்த காரின் […]
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மரையூர் அருகே உள்ள சாலையில் யானை ஒன்று குட்டி ஈன்றுள்ளது. கருவுற்ற யானை ஒன்று பிரசவ வலியில் மரையூர் சாலையில் பிளிறியப்படி வந்துள்ளது. அதனை கண்ட வாகன ஓட்டிகள் தொலைதூரத்திலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு அமைதி காத்துள்ளனர். யானையும் 1 மணி நேரமாக பிரசவ வலியில் பிளிறியப்படி இருந்துள்ளது. பின்னர் சாலைக்கு நடுவே யானை குட்டியையும் ஈன்றுள்ளது. பிறகு குட்டியை தழுவிக்கொண்டு அதனை எழுந்து நிற்க வைத்து பின்னர் காட்டுக்குள் […]
இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் யானை. இந்த படம் வருகிற மே மாதம் ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பட வெளியீட்டு தேதியில் மாற்றம் செய்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விநியோகஸ்தர்களின் வேண்டுகோளின் பேரில் வெளியீட்டு தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஜூன் 17ஆம் தேதி முதல் திரையரங்குகளில் யானை […]
கேரளா மாநிலம் திருச்சூர் ஆராட்டுபுழா கோயில் திருவிழா சிறப்பாக நடைபெற்று கொண்டிருந்தது. இந்த திருவிழாவில் 3 யானைகள் கொண்டுவரப்பட்டு சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்தன. இந்த யானைகளில் திடீரென ஒரு யானை மதம் பிடித்து மற்றொரு யானையை முட்டியது. இதனால் மற்ற 2 யானைகளும் மிரண்டு வெவ்வேறு திசைகளில் ஓடியதால் திருவிழாவிற்கு கூடியிருந்த பொதுமக்களும் பயந்து அலறியடித்து ஓடத்தொடங்கினர். பயந்து ஓடியதில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் குழிகளுக்குள் விழுந்து படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து ஆக்ரோஷமாக காணப்பட்ட […]
யானைகள் கடக்கும் பகுதிகளிலும், ரயில் இன்ஜின்களிலும் தெர்மல் ஸ்கேனிங் முறையில் நவீன கேமராக்கள் அமைக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் யானைகள் வேட்டையாடப்படுவதை தடுப்பது தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் யானை இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரயில்வே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி.ராம்குமார், […]
ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பது தொடரும் நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் இம்மானுவேல் மற்றும் திருச்சியை சேர்ந்த நித்திய சௌமியா யானைகள் கொடூரமாக வேட்டையாடுதல் மற்றும் யானைகள் உயிரிழப்பு குறித்து குறித்த வழக்குகளை விசாரிக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் யானை இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் […]
3 யானைகள் பலியான விவகாரத்தில் ரயில் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் நேற்றிரவு தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் யானை உட்பட மூன்று யானைகள் மீது கேரளாவிலிருந்து மங்களூர்-சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் ஒன்று மோதியது. இதில் யானைகள் படுகாயமடைந்து இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் மற்றும் வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மதுக்கரை வனச்சரக அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் விரைந்து வந்தனர். இருப்பினும் அடுத்தடுத்து […]
யானை மீட்கும் பணியை ஒளிப்பதிவாக்க சென்றிருந்த பிரபல தொலைக்காட்சி செய்தியாளர் படகு கவிழ்ந்தால், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் எனும் பகுதியின் அருகில் உள்ள மகாநதியில் கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளம் கரைபுரண்டு ஓடியுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை ஒன்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நதியின் நடுப்பகுதிக்கு சென்று மீண்டும் கரைக்கு வர முடியாமல் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டு இருந்துள்ளது. இதனை அடுத்து ஒடிசா பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் […]
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த காட்டு யானையின் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் அரசு பேருந்து ஒன்று கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது மேல்தட்டப்பள்ளம் என்ற இடத்தில் காட்டு யானை ஒன்று அரசு பேருந்தை வழிமறித்துள்ளது. இதனால் செய்வதறியாது, ஓட்டுநர் பேருந்தை பின்னோக்கி இயக்கியுள்ளார். இதன் பின்னர் பேருந்தை நோக்கி காட்டு யானையும் வேகமாக துரத்தி வந்துள்ளது. துரத்தி வந்த காட்டு யானை பேருந்தின் முன்பக்க கண்ணாடியை […]
தமிழகத்தில் தனி நபர்கள் யானைகள் வைத்திருக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் இனிமேல் யானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது என்று கோவில் யானைகள் பராமரிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோயில் கட்டுப்பாட்டில் 32 யானைகளும், தனியார் கட்டுப்பாட்டில் 31 யானைகளும், வனத்துறை கட்டுப்பாட்டில் 67 யானைகளும் உள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், கோயில் யானைகள், வளர்ப்பு யானைகள் குறித்து அறிக்கை அளிக்க தமிழக […]
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் யானையுடன் செல்பீ எடுக்க முயற்சித்த பொழுது, யானை மிதித்ததால் உயிரிழந்துள்ளார். சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள மகாசாமந்த் எனும் பகுதியை சேர்ந்த அரசு சுகாதார ஊழியர் அஜய் திவாரி என்பவர் நேற்று முன்தினம் பணி முடிந்து காட்டு வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியில் ஒரு யானை கூட்டம் சாலையை கடந்து செல்வதை கண்டு ஆர்வத்துடன் அந்த யானை கூட்டத்தை பின்தொடர்ந்து செல்பீ எடுக்க முயற்சி செய்துள்ளார். இவரைப் […]
கிருஷ்ணகிரியில் நிலக்கடலை தோட்டத்திற்குள் புகுந்த யானை தாக்கியதில், இரவு நேர காவலுக்கு நின்ற இரண்டு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநில எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி எனும் பகுதியில் உள்ள வனப்பகுதியில் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் சிலர் அண்மையில் உயிரிழக்கவும் நேரிட்டுள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிகரலப்பள்ளி எனும் கிராமத்தை சேர்ந்த, 30 வயதுடைய சந்திரன் மற்றும் நேரலகிரி எனும் கிராமத்தை சேர்ந்த 50 வயதுடைய நாகன் […]
அசாம் மாநிலத்தில் யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்ததால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தில் உள்ள கம்ரூப் எனும் மாவட்டத்தின் மிர்சா எனும் பகுதியில் நெல் வயலைச் சுற்றி மின்சார வேலி அமைக்கப்பட்டு இருந்துள்ளது. இந்த மின்சார வேலியில் உரசிய யானை ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை இந்த யானை உயிரிழந்து கிடப்பதைப் பார்த்த உள்ளூர்வாசிகள் உடனடியாக காவல்துறையினர் மற்றும் வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு […]
கேரள மாநிலம் திரிச்சூரில் யானை தாக்கியதில் இருவர் பலியாகியுள்ளனர். திரிச்சூரில் உள்ள பலப்பிள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சைனுதீன்(50). இவரை நேற்று இரவிலிருந்து காணவில்லை என்பதால் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இவரது உடல் பலத்த காயங்களுடன் அருகில் உள்ள கணபதி கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதேபகுதியை சேர்ந்த மேலும் ஒரு நபரான பீதாம்பரம் விடியற்காலை 5.30 மணியளவில் வீட்டை விட்டு கிளம்பியுள்ளார். ரப்பர் தொழிலாளியான இவர் 6.30 மணியளவில் ரப்பர் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த இருவரின் […]