திருமணத்துக்கு கூப்பிட மாட்டியா? டென்ஷனாகி பக்கத்துக்கு வீட்டுக்காரர் செய்த அதிர்ச்சி செயல்!

தனது பக்கத்து வீட்டுக்காரரின் திருமணத்தின் முந்தைய விழாவிற்கு அழைக்கப்படாததால் கோபமடைந்த 21 வயது நபர் துப்பாக்கிசூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

uttar pradesh

உத்திரபிரதேசம் : மாநிலம் காஜியாபாத்தின் லோனியில் உள்ள ட்ரோனிகா நகரில் சோனு என்பவருடைய மகன் தீபான்ஷூவுக்கு சனிக்கிழமை திருமணம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு திருமணத்திற்கு முந்தய விழாக்கள் சந்தோசமாக நடந்துவந்துள்ளது. அப்படி தான் நேற்று ஹால்டி விழா நடைபெற்றபோது சந்தோசமாக நடந்து முடியும் என உறவினர்கள் நினைத்த நிலையில், அங்கு வந்த மணமகனின் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும்  வன்ஷ் வால்மீகி என்பவர் பரபரப்பை கிளப்பும் வகையில் துப்பாக்கிசூடு நடத்தினார்.

திடீரென இந்த நபர் துப்பாக்கிசூடு நடத்தியதை பார்த்தவுடன் நிகழ்ச்சியில் இருந்தவர்கள் என்ன நடக்குது இங்க? என்பது போல முழித்தார்கள். இந்த சம்பவத்தின் போது மணமகனின் தந்தை சோனுவுக்கு காயம் ஏற்பட்டது. பிறகு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி தப்பித்து ஓடினார். பிறகு அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் உடனடியாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வன்ஷ் வால்மீகியை அதிரடியாக கைதும் செய்தனர்.

கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியபோது தான் அவர் இந்த மாதிரி மோசமான சம்பவத்தில் ஈடுபட திருமணத்தின் ஹால்டி நிகழ்ச்சியில் தன்னை அழைக்கவில்லை என்பது தான் காரணம் என கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து மணமகன் கூறும்போது ” என்னுடைய திருமணத்திற்கான இந்த ஹால்டிவிழாவிற்கு நெருங்கிய உறவினர்கள் வருகை தந்திருந்தார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு, எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் வான்ஷ் வால்மீகி மற்றும் அவரது நண்பர் தருண் தாக்கூர் (22) ஆகியோர் எங்கள் வீட்டிற்கு வெளியே வந்து தகாத வார்த்தைகளை பேசி எங்களை எதுக்கு அழைக்கவில்லை என்பது போல பேசினார்கள்.

என் தந்தை எதிர்த்தபோது, ​​வான்ஷ் ஒரு நாட்டுத் துப்பாக்கியை எடுத்துசுட தொடங்கினார். சம்பவம் நடந்த பிறகு இருவரும் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர், நாங்கள் என் தந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்” எனவும் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில், ட்ரோனிகா நகர காவல் நிலையம் வான்ஷ் வால்மீகி மற்றும் தருண் தாக்கூர் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 109 (கொலை முயற்சி) மற்றும் 352 (வேண்டுமென்றே அவமதிப்பு) ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்