டெல்லி கலவர வழக்கு: சிறையில் உள்ள உமர் காலித்தின் ஜாமின் மனு தள்ளுபடி.!

உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோர் கலவரத்தின் மூளையாக செயல்பட்டதாக டெல்லி காவல்துறை குற்றம் சாட்டியிருந்தது.

Delhi High Court - Umar Khalid

டெல்லி :பிப்ரவரி 2020 இல் நடந்த டெல்லி கலவரத்திற்குப் பின்னால் நடந்த பெரிய சதித்திட்டம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உயர் நீதிமன்றத்திலிருந்து பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கலவர சதித்திட்டம் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA) வழக்கில் ஷர்ஜீல் இமாம், உமர் காலித் உள்ளிட்ட 9 குற்றவாளிகளின் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி நவீன் சாவ்லா மற்றும் நீதிபதி சைலேந்திர கவுர் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஷர்ஜீல் இமாம், உமர் காலித், முகமது சலீம் கான், ஷிஃபா உர் ரஹ்மான், அதர் கான், மீரான் ஹைதர், அப்துல் காலித் சைஃபி, தஸ்லீம் அகமது மற்றும் குல்பிஷா பாத்திமா ஆகியோருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

நீதிமன்றத்தில் உமர் காலித் மற்றும் பிறரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்குத் தொடரப் போவதாகக் கூறினார். 2020 ஆம் ஆண்டு டெல்லியில் கலவரங்கள் நடந்தன, உமர் காலித் மற்றும் பலர் சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

கலவரத்தின் மூளையாக உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோர் செயல்பட்டதாக டெல்லி காவல்துறை குற்றம் சாட்டியது. உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோர் கலவரத்தின் மூளையாக செயல்பட்டதாக டெல்லி காவல்துறை குற்றம் சாட்டியிருந்தது. அதன் பிறகு அவர்கள் மீது UAPA-வின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.