திருப்பதி கோயிலில் தரிசனம்:நாளை முதல் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு!லிங்க் இங்கே!

ஆந்திரா:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டிற்கான ஆன்லைன் முன்பதிவு நாளை முதல் தொடங்கப்படவுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது.அதன்படி, சிறப்பு தரிசனத்திற்கான ரூ.300-க்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை 9 மணி முதல் தொடங்குகிறது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி,தினமும் 20 ஆயிரம் வீதம் 6 லட்சம் ரூ.300-க்கான தரிசன டிக்கெட்டுகளை விற்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
அதே சமயம்,இலவச தரிசன டிக்கெட்கள் நாளை மறுநாள்(25 ஆம் தேதி) காலை 9 மணிக்கு ஒரு நாளைக்கு 5 ஆயிரம் வீதம் மொத்தம் என 1 லட்சத்து 50 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளதாகவும்,இலவச தரிசனத்தில் திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு நேரடியாக ஒரு நாளைக்கு 5 ஆயிரம் டிக்கெட்கள் எனவும்,ஆன்லைனில் 5 ஆயிரம் டிக்கெட்கள் எனவும் தினந்தோறும் 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்கள் வெளியிடப்பட உள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மேலும்,திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட் பெற நாளை முதல் https://www.tirumala.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை பார்வையிடாலம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025