Hanuma Vihari : கடந்த திங்கள்கிழமை (பிப்ரவரி 26,2024) அன்று இந்தூரில் நடைபெற்ற ரஞ்சி டிராபியின் காலிறுதி போட்டியில் மத்தியப் பிரதேச அணியிடம், ஆந்திரா அணி தோல்வியடைந்தது. இதை தொடர்ந்து ஆந்திர கிரிக்கெட் வாரியத்தில் மிகப்பெரிய குழப்பம் நிலவியது. ஆந்திர அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய அணியன் டெஸ்ட் போட்டிகளின் நட்சத்திர வீரருமான ஹனுமா விஹாரி ஆந்திர கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து தானாகவே ராஜினாமா செய்ததுடன் ஆந்திர அணியிலிருந்தும் வெளியேறி உள்ளார். Read More :- […]
புஷ்பா பட பாணியில் காரின் மேற்கூரையில் 130 கிலோ கஞ்சா கடத்தி 2 பேர் சிறப்பு அமலாக்கத்துறையினரிடம் சிக்கியுள்ளனர். தெலுங்கு படமான புஷ்பா எனும் திரைப்படத்தில் நாயகன் அல்லு அர்ஜுன் சட்டவிரோதமாக மரக்கட்டைகளை கடத்துவதற்கு வெவ்வேறு பாணிகளை கையாளுவார். அதில் ஒன்று வாகனத்தில் மரக்கட்டைகளை கடத்துவது போல காட்சி படுத்தப்பட்டு இருக்கும். கிட்டத்தட்ட அதே பாணியில் அண்மையில் சில கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று அதனை, போலீசார் லாவகமாக பிடித்துள்ளனர். அப்படித்தான், அண்மையில், 130 கிலோ அளவில் கடத்தப்பட […]
நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியம்.. 8 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கோவில்! மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல அழகான கோவில்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் 135 ஆண்டுகள் பழமையான வாசவி கன்யகா பரமேஸ்வரி தேவியின் கோவிலில் நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய நிகழ்வு ஒன்று பொதுவானதாக இல்லாமல் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. ஆந்திராவில் உள்ள இந்த கோவில் தசராவின் போது தங்கம் மற்றும் பணத்தால் அலங்கரிக்கப்பட்டு பார்ப்பவர்களின் கண்களை […]
ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 125-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்றுள்ளார். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், பழம்பெரும் சுதந்திரத்தின் 30 அடி வெண்கலச் சிலையை அவர் திறந்து வைத்தார். ஆந்திராவில் விஜயவாடாவில் பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டர் அருகே கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டதை அடுத்து 4 காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மேலும் சிலரை கைது செய்ய […]
ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஊழல் தடுப்புப் பணியகத்தால்(ஏசிபி) உருவாக்கப்பட்ட ‘14400’ செயலியை(ACB mobile app 1440) மக்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளார்.அதன்படி,மாநிலத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் தொடர்பான புகார்களைப் பதிவு செய்யவும்,முழு ஆதார ஆதாரங்களை நீதிமன்றத்தில் வழங்கவும் இந்த செயலி தொடங்கப்பட்டுள்ளது.குறிப்பாக,ஊழல் தொடர்பான புகார் அளிக்க மக்களுக்கு உதவும் வகையில் இந்த அதிநவீன செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி,நவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் புகார்களைப் பதிவு செய்வதற்கும் வெளிப்படைத்தன்மையைப் பேணுவதற்கும் ஏசிபி […]
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8 ஆம் தேதி அசானி புயலாக வலுப்பெற்றது.அதன்பின்னர் வடமேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வந்து ஆந்திராவின் மசிலிப்பட்டணத்திற்கு அருகே நிலை கொண்டிருந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்து. அதன்பின்னர்,அசானி புயலானது திசை மாறி ஒடிசா கடலோரத்தை நோக்கி நகர்ந்து இன்று காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இதனால்,வடக்கு ஆந்திரா மாவட்டங்களில் கனமழை […]
கொரோனா தொற்றுநோய் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது ஆந்திராவில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 27 முதல் நடத்தப்படுகின்றன. இந்நிலையில்,10 ஆம் வகுப்பு ஆண்டுத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆந்திரப் பிரதேசம் முழுவதும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 42 ஆசிரியர்கள் ஆந்திர பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் மற்றும் நியாயமற்ற வழிமுறைகள்) சட்டம், 1997 இன் கீழ் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முதல் நாளில் தேர்வு […]
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 24 வயதுடைய பெண்ணொருவர் தனக்கு ஒருவர் வேலை வாங்கித் தருவதாக கூறி பலாத்காரம் செய்து விட்டதாகவும், அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கச் சென்ற பெண் கூறுகையில், போலீஸ் லென்ஸ் எனும் பகுதிக்கு வருமாறு தன்னை அழைத்ததாகவும், அங்குள்ள உறவினரிடம் சொல்லி தனக்கு வேலை வாங்கி தருகிறேன் எனக் கூறியதால் தான் அங்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். அப்பொழுது அவரது சகோதரி […]
ஆந்திர மாநிலம் எலுரு தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல். ஆந்திர பிரதேச மாநிலம்,ஏலூரில் உள்ள அக்கிரெட்டிகுடேமில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும்,முதல்வர் மற்றும் ஆளுநரின் அறிக்கையின்படி,தீ விபத்தில் மொத்தம் 13 பேர் காயமடைந்தனர் மற்றும் 6 பேர் இறந்தனர் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து,நைட்ரிக் அமிலம்,மோனோமெதில் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக ஏலூர் எஸ்பி ராகுல் தேவ் சர்மா தெரிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,ஆந்திர […]
ஆந்திரா:நடிகை ரோஜா உட்பட 25 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.அப்போது,இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,அண்மையில் 24 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இந்நிலையில்,ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் இன்று காலை 11.30 மணிக்கு புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது.இந்த புதிய அமைச்சரவையில் […]
ஆந்திரா:ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இன்று முதல் மொத்தம் 26 மாவட்டங்களாக உருவெடுத்துள்ளது. ஆந்திர மாநில அரசு,கடந்த ஜனவரியில்,ஏற்கனவே உள்ள ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி,மேற்கு கோதாவரி, கிருஷ்ணா,குண்டூர்,நெல்லூர்,பிரகாசம், அனந்தபுரம், கர்நூல், கடப்பா, சித்தூர் ஆகிய 13 மாவட்டங்களில் இருந்து புதிய மாவட்டங்களை பிரிப்பதற்கான வரைவு அறிவிப்பை வெளியிட்டு,பரிந்துரைகள் மற்றும் ஆட்சேபனைகளை அழைத்தது. இதனையடுத்து,ஆந்திரப் பிரதேச அரசு தற்போதுள்ள 13 மாவட்டங்களில் இருந்து மேலும் 13 புதிய மாவட்டங்களை பிரித்து அரசிதழ் அறிவிப்பை […]
சென்னைக்கு வடக்கே 100 கி.மீ தொலைவில் திருப்பதி அருகே 3.6 ரிக்டர் அளவிலான இலேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல். சென்னைக்கு வடக்கே 100 கி.மீ தொலைவில் திருப்பதி அருகே 3.6 ரிக்டர் அளவிலான இலேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும்,ஆந்திரா மாநிலம் திருப்பதிக்கு வடகிழக்கில் 85 கிமீ தொலைவில் நள்ளிரவு 1.10 க்கு இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் இந்திய நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது. An earthquake of magnitude 3.6 occurred […]
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பண்டிதிவாரி பாலம் கிராமத்தில் பழமையான ராமர் கோவில் முன்பு இருந்த, 40 டன் எடையுள்ள 44 அடி உயரம் கொண்ட ஒரே கல்லால் ஆன கொடிமரத்தை அகற்ற முயன்ற போது விபரீதம். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பண்டிதிவாரி பாலம் கிராமத்தில் பழமையான ராமர் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலுக்கு முன்பு 40 டன் எடையுள்ள 44 அடி உயரம் கொண்ட ஒரே கல்லால் ஆன கொடிமரம் […]
ஆந்திரா:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டிற்கான ஆன்லைன் முன்பதிவு நாளை முதல் தொடங்கப்படவுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது.அதன்படி, சிறப்பு தரிசனத்திற்கான ரூ.300-க்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை 9 மணி முதல் தொடங்குகிறது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி,தினமும் 20 ஆயிரம் வீதம் 6 லட்சம் ரூ.300-க்கான தரிசன டிக்கெட்டுகளை விற்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. அதே சமயம்,இலவச தரிசன டிக்கெட்கள் […]
ஆந்திரா:சென்னையிலிருந்து திருப்பதிக்கு சென்ற 39 வயது பெண்ணுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கென்யாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து,அங்கிருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்ற 39 வயது பெண்ணுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும்,அப்பெண்ணின் குடும்பத்தினர் 6 பேருக்கு எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் சோதனையில் கொரோனா நெகட்டிவ் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால்,ஆந்திரா மாநிலத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
ஆந்திரா:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரமாக கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,சித்தூர், கடப்பா, நெல்லூர் மற்றும் அனந்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் அதிக கனமழையால்,குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனையடுத்து,நெல்லூர் மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டர் மூலம் […]
ஆந்திரா, ஒடிசாவில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மற்றும் ஆந்திராவிற்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. மேலும் குலாப் சூறாவளி புயலாக மாறி தெற்கு ஒடிசா மற்றும் […]
மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, ஆந்திரா மற்றும் அசாமில் நாளை மறுநாள்(செப்.,21) பள்ளிகளை திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், 4காம் கட்ட தளர்வுகளை சமீபத்தில் வெளியிட்டது. அதில் நாளை மறுநாள் முதல், பள்ளிகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. என்றாலும் மாநில அரசுகள், இது குறித்து முடிவு எடுத்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. மத்திய அரசு சார்பில் பள்ளிகளை திறக்க, அனுமதி அளித்திருந்தாலும், சில கட்டுப்பாடுகளையும் உடன் விதித்துள்ளது. அதில் மாணவர்கள் மற்றும் […]
இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளை அனைத்தயும் அச்சுறுத்திவரும் உயிர்கொல்லி வைரஸ் நோய் தொற்றான கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னமும் குறைந்த பாடில்லை. இந்த வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க இந்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மக்கள் அத்தியவசிய பொருள்களை வாங்க வரும்போதும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அரசு வழியுறுத்தி, கடைபிடிக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் 71 பேருக்கு உறுதி […]
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஆந்திரா மாநிலத்தில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் மண்டல பரிஷத் மற்றும் ஜில்லா பரிஷத் உள்ளாட்சி பிரிவுகளுக்கான தேர்தல் ஆனது வரும் 21 ந் தேதியும்,நகராட்சி மற்றும் மாநகராட்சிக்களுக்கான தேர்தல் 23ந்தேதியும் நடைபெற இருந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகவும் மேலும் தொற்று பரவுவதை தடுக்கும் வகையிலும் உள்ளாட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அம்மாநில தேர்தல் ஆனையர் தெரிவித்துள்ளார். இது குறித்து அம்மாநில தேர்தல் ஆணையர் […]