ஹைதராபாத் குடியிருப்புகளுக்கு அருகே, மிர் ஆலம் ஏரியில் முதலைகள்! வெளியான வீடியோ.!

ஹைதராபாத் மிர் ஆலம் ஏரியில் முதலைகள் காணப்பட்டன, இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

ஹைதராபாத் மிர் ஆலம் ஏரியில் முதலைகள் காணப்பட்டன, இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

ஹைதராபாத்தின் மிர் ஆலம் ஏரியில் முதலைகள் காணப்படுவதால் அப்பகுதியிலுள்ள மக்கள் அச்சமடைந்து முதலைகளை வேறு பொருத்தமான இடத்திற்கு மாற்ற வேண்டும் என மாநகராட்சிக்கு வலியுறுத்தியுள்ளனர். மீர் ஆலம் ஏரிக்கு அருகே பாம்புகள், தேள்கள் போன்ற ஊர்வன குறித்து மக்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில் தற்போது முதலைகளும் வசிக்க தொடங்கியுள்ளன.

இந்த ஏரிக்கு அருகிலுள்ள நெக்லஸ் சாலை திறப்பதில் ஏற்பட்ட தாமதமும் ஏரியில் முதலைகள் வசிப்பதுதான் காரணம் என்று கருதப்படுகிறது. மிர் ஆலம் ஏரியில், நெக்லஸ் சாலையை ஒட்டிய ஹாசாநகர், இந்திராநகர், ஃபாத்திம்நகர் மற்றும் இதர பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் பாம்புகள் மற்றும் தேள்கள் ஏரியிலிருந்து தங்கள் வீடுகளுக்குள் வந்து தங்கள் குழந்தைகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஏற்கனவே புகார் கூறியுள்ளனர்.

unknown node