கோவிட் தடுப்பூசியினால் ஒரு பெண் இறப்பு.? 1000 கோடி இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு.!
உலகை அச்சுறுத்திய கொரோனா எனும் பேராபத்தில் இருந்து நம்மை காப்பாற்றியதில் பெரும்பங்கு கொரோனா தடுப்பூசிக்கு உண்டு. ஆனால் அந்த தடுப்பூசி காரணமாக தனது மகள் இறந்துவிட்டார் என ஒரு தந்தை மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதாவது, கோவிட் ஷீல்ட்டு எனும் வகை தடுப்பூசியை திலீப் லுனாவத் என்பவரின் மகள் செலுத்தியதாக தெரிகிறது. அண்மையில் தடுப்பூசி செலுத்திய அந்த பெண் உயிரிழந்துள்ளார்.
இதன் காரணமாக, தனது மகள் இறப்புக்கு தடுப்பூசி தான் காரணம். அதன் பக்க விளைவுகளால் தான் மகள் இறந்துவிட்டார் என கூறியுள்ளார் . இதன் காரணமாக, மகாராஷ்டிரா அரசு, மத்திய அரசு, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) மற்றும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் ஆகியோரிடம் இருந்து ₹1,000 கோடி இழப்பீடு தரவேண்டும் என அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.