"அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் தயாராக உள்ளது" – பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசி எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதை உடனடியாக இந்தியாவுக்கு கொண்டுவரும் முயற்சி எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதை உடனடியாக இந்தியாவுக்கு கொண்டுவரும் முயற்சி எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியது முதல், தற்பொழுது வரை ஏழாவது முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து காணொலி மூலமாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் இன்னும் நம்மை விட்டு முழுமையாக போகவில்லை என்பதை மக்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என கூறினார்.

மேலும் பேசிய அவர், கொரோனா தாக்கம் குறைந்தது என நினைத்து பலர் பாதுகாப்பு நடைமுறைகளை சரியாக கடைபிடிக்காமல் இருப்பதாக தெரிவித்த அவர்,கொரோனா தடுப்பூசிவரும் வரை மக்கள் அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும், தடுப்பூசிஎந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதை உடனடியாக இந்தியாவுக்கு கொண்டுவரும் முயற்சி எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.