டெல்லியில் ஒரே நாளில் 384 பேருக்கு கொரோனா உறுதி இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4122ஆக உயர்வு.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 37776 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 10018 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை 1223 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் டெல்லி கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ளது. நேற்று(மே 2) ஒரே நாளில் டெல்லியில் 384 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்று மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4122ஆக உயர்ந்துள்ளது. இதில் 64 பேர் பலி மற்றும் 1256 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
unknown node