#BREAKING: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா..!

Union Minister Prakash Javadekar has been confirmed to have a corona infection.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களிலும் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில் நாள்தோறும் பல அரசியல் தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கபப்ட்டு வருகின்றனர். இந்நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தனது ட்விட்டரில் நான் இன்று பரிசோதனை செய்தேன் பாசிட்டிவ் என வந்துள்ளது. கடந்த 2-3 நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களை பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

unknown node