குடியரசு தினவிழா ஒத்திகையில் கலந்து கொண்ட 150 இராணுவ வீரர்களுக்கு கொரோனா!

About 150 soldiers who attended the Republic Day parade rehearsal in Delhi have been diagnosed with corona infection

டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை விழாவில் கலந்து கொண்ட ராணுவ வீரர்களில் 150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இந்நிலையில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், மேலும் ஜாக்கிரதையுடன் இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனை அடுத்து, டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை விழாவில் கலந்து கொண்ட ராணுவ வீரர்களில் 150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ராணுவ வீரர்கள், நோய்த்தொற்று கண்டறியப்பட்டதும் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானோருக்கு அறிகுறியே இல்லை என்றும்  ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.