டெல்லி: முன்னாள் முப்படைகளில் தலைமைத் தளபதியான பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததற்கு மனித தவறே காரணம் என மக்களவையில் தாக்கலான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 2021 ம் ஆண்டு 8-ம் தேதி கோவை வந்த முப்படைத் தளபதி பிபின் ராவத், குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவத் தளத்தில் நடைபெறவிருந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார். பிற்பகல் 1 மணியளவில் வெலிங்டனில் தரையிறங்க சில […]
கேரளா : வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். ன்னும் 240 பேரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். சூரல்மாலா மற்றும் மேப்பாடியில் நிலச்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த 578 குடும்பங்களைச் சேர்ந்த 2,328 பேர் ஒன்பது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 4ஆவது நாளாக மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், மண்ணில் புதைந்துள்ள உடல்களை மீட்க ராணுவம், இஸ்ரோ, வனத்துறை, […]
வடக்கு சிக்கிம் பகுதியில் உள்ள ஜெமாவில் ஏற்பட்ட வாகன விபத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு. வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமா என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வாகனம் பள்ளத்தில் விழுந்து நொறுக்கிய விபத்தில் 16 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. விபத்தில் சிக்கிய மேலும் 4 வீரர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் […]
ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல், இன்று மதுரை வருகிறது ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் ஆவர்.24 வயதான இவர் மதுரை மாவட்டம் […]
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ள ராணுவ ஆட்சேர்ப்பு இயக்கங்களை மீண்டும் தொடங்குமாறு கோரிக்கை வைத்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தானில் உள்ள சுகர் பகுதியில் இருந்து இளைஞர் ஒருவர் ஓடிச்சென்றே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். மார்ச் 29ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கிய இவர் 50 மணி நேரம் ஓடி உள்ளார். கிட்டத்தட்ட 350 கிலோ மீட்டர் தூரம் ஓடி சென்றுள்ள சுரேஷ் பிக்சர் எனும் […]
குன்னுரில் அருகே ஏற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்து மோசமான வானிலையே காரணம் என தகவல். கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி குன்னுர் அருகே Mi-17V5 என்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படைத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த நிலையில், குரூப் கேப்டன் வருண் சிங் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு, விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உலகின் மிக அதிநவீன ராணுவ ஹெலிகாப்டர் […]
முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கு மருத்துவ கல்வியில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு. புதுச்சேரியில் முன்னாள் ராணுவ அதிகாரிகளின் வாரிசுகளுக்கு மருத்துவ கல்வியில் 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு முதல் மருத்துவ கல்வியில் 3% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாகலாந்து துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ராணுவத்தினர் மன்னிப்பு கோரியதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். நாகலாந்து மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை இராணுவத்தினர் தீவிரவாதிகள் என நினைத்து பொது மக்கள் மீது நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கருத்துக்கள் மற்றும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நாகலாந்து துப்பாக்கிச்சூடு […]
வீரமரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த 3 இராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு முதல்வர் 20 லட்சம் காசோலை வழங்கியுள்ளார். ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழகத்தை சேர்ந்த மூன்று படைவீரர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் வைத்து கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து தலா 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி உள்ளார். இதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் சேர்ந்த படைவீரருக்கு ஏகாம்பரம் அவருடைய மனைவி குமாரி அவர்களுக்கும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி […]
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தடுப்பூசி எடுத்துக்கொண்ட 30 இராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், தொடர்ந்து ஆங்காங்கே பரவிக் கொண்டே தான் இருக்கிறது. அதிலும் முன்கள பணியாளராக பணியாற்ற கூடிய மருத்துவர்கள், காவலர்கள், ராணுவ வீரர்கள் பலருக்கும் கொரோனா தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள 30 ராணுவ வீரர்களுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி […]
மியான்மரில் ஜனநாயக ஆட்சி நடைபெற்ற பொழுது எம்.பிக்களாக இருந்த அனைவரையும் மியான்மரில் உள்ள ராணுவம் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியை கவிழ்த்து மியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கடந்த பிப்ரவரியில் கைப்பற்றியது. இந்நிலையில் ஆங் சான் சூகி அவர்களுடன் சேர்த்து முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அன்றைய தினம் நள்ளிரவிலேயே கைது செய்யப்பட்டு மியான்மரில் […]
நாட்டில் உள்ள அனைத்து ஆக்ஸிஜன் தொழிற்சாலைகளை ராணுவத்திடம் ஓப்படைக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், பல மாநிலங்களில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் டெல்லியில் நாள் ஒன்றுக்கு 25,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அம்மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் குறைவாக உள்ளதாகவும், ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் […]
சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடுத்துள்ளது. சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. அதாவது ரோந்து பணியின்போது எல்லை பகுதியில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவ முயற்சி செய்ததை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. ஊடுருவ முயற்சியை கைவிடாததால் ஏற்பட்ட இருதரப்பு தள்ளுமுள்ளில் 20 சீன வீரர்கள் மற்றும் 4 இந்திய வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை விழாவில் கலந்து கொண்ட ராணுவ வீரர்களில் 150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், மேலும் ஜாக்கிரதையுடன் இருக்குமாறு […]
200 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுவனை காப்பாற்றும் முயற்சியில் மஹாராஷ்டிரா மீட்புக்குழு ராணுவம். இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழக்கக்கூடிய சிறுவர்களின் மரணம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது. மிக பெரிய தாக்கத்தை தந்த சுஜித்தின் மரணத்திற்கு பின்பும்கூட பல இடங்களில் கவனக்குறைவால் குழந்தைகள் விழுந்து உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தற்பொழுது மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நிவாரி எனும் மாவட்டத்தில் பர்கோ பூஜோர்க் எனும் கிராமத்தில் வாசிக்க கூடிய […]
ஜம்மு & காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. இது ஒருபக்கம் என்றால் மறுபக்கம் லடாக்கில் சீனா வேறு குடைச்சல் கொடுத்து வருகிறது. இந்நிலையில், நேற்று திடீரென இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே 2 நாட்கள் பயணமாக நேற்று வடக்கு காஷ்மீர் சென்றார். எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே பாகிஸ்தானின் அத்துமீறிய […]
இந்த ஆண்டிற்கான பல துறைகளுக்கான ஆட்சேர்ப்பு பணியை மாநில அரசுகள் தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.Railways, Indian Army, CISF 2020-ஆம் ஆண்டிற்கான ரயில்வே, இந்திய ராணுவம், சி.ஐ.எஸ்.எஃப் வேலைவாய்ப்பின் ஆட்சேர்ப்பு குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 1. எஸ்.எஸ்.பி(SSB ) கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு : பல்வேறு துறைகளில் உள்ள மொத்தம் 1522 கான்ஸ்டபிள் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு தற்போது நடைபெற்று வருகின்றன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் ஆகஸ்ட் 27 -க்கு முன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். […]
எல்லை விவகாரம் குறித்து இந்தியா-சீன ராணுவ முத்த கமாண்டர்கள் இடையிலான பேச்சுவார்த்தை, கிழக்கு லடாக்கில் உள்ள காஷுல் பகுதியில் தொடங்கியது. லடாக் எல்லையில் உள்ள கல்வான் பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா தரப்பில் பலரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. இதன்காரணமாக, இரு நாட்டு ராணுவத்திற்கிடையே பதற்றம் ஏற்பட்டது. இதனை தணிக்கும் விதமாக, இரு நாட்டு ராணுவப்படை கமாண்டர்கள் மட்டத்தில் […]
லடாக் எல்லையில் படைகளை மேலும் விலக்கிக் கொள்வது குறித்து நாளை இந்தியா-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. லடாக் எல்லையில் உள்ள கல்வான் பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா தரப்பில் பலரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. இதன்காரணமாக, இரு நாட்டு ராணுவத்திற்கிடையே பதற்றம் ஏற்பட்டது. இதனை தணிக்கும் விதமாக, இரு நாட்டு ராணுவப்படை கமாண்டர்கள் மட்டத்திலும், இரு […]
சீனப் படையினருடன் போராடிய ஐந்து இந்திய ராணுவ வீரர்களுக்கு அண்மையில் இராணுவத் தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவனே ‘பாராட்டு வாழ்த்து அட்டைகள்’ வழங்கியதுடன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டதாக ராணுவ வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனா-இந்தியா இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்சணையில் சீன ராணுவத்தினை எதிர்கொண்டு இந்திய வீரர்களுக்கு முன்மாதிரியான துணிச்சலையும், தைரியத்தையும் வெளிப்படுத்தியதற்காக படைவீரர்கள் 5 பேருக்கு விருது வழங்கப்பட்டதாகவும் ஆனால் இந்திய இராணுவம் அந்த ஐந்து வீரர்களைப் பற்றியோ அல்லது அவர்களின் பிரிவுகளைப் பற்றியோ எந்த […]