கர்நாடகாவில் ஒரே நாளில் 308 பேருக்கு கொரோனா உறுதி

கர்நாடகா மாநிலத்தில் நேற்று மட்டும் 308 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ள நிலையில் மொத்த பாதித்தவர்களில் எண்ணிக்கை 6,824 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே

கர்நாடகா மாநிலத்தில் நேற்று மட்டும் 308 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ள நிலையில் மொத்த பாதித்தவர்களில் எண்ணிக்கை 6,824 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 464 பேர் குணமடைந்த நிலையில் மொத்தமாக 3,648 பேர் குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.மருத்துவமனையில் 2997  சிகிச்சை பெற்று வருகிறார்கள். கர்நாடகாவில் நேற்று மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை மொத்தமாக கொரோனாவால் 84 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று  இந்தியாவில்  11,458 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 3,08,993 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,884 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,54,330 ஆகவும் உயர்ந்துள்ளது.