அருணாசலப் பிரதேச முதல்வர் பீமா காண்டுவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நான் ஆர்டி-பி.சி.ஆர் கருவி மூலம் கொரோனா பரிசோதனை செய்தேன். பரிசோதனை முடிவில் எனக்கு தொற்று இருப்பது உறுதியானது என்று கூறியுள்ளார். மேலும், எனக்கு அறிகுறி எதுவும் இல்லை. நான் நலமுடன் இருக்கிறேன். தற்போது நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
unknown node