பாஜக மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் இடையே மோதல் !

BJP and Aam Aadmi Party councilors clashed at a meeting at the ETMC House in Delhi. Video goes viral on the internet.

டெல்லியில் நடைபெற்ற ஈ.டி.எம்.சி ஹவுஷில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மோதிக்கொண்டனர். இணையத்தில் வைரலாகும் வீடியோ.

பொதுவாகவே கட்சிக் கூட்டங்கள் என்றால் என்றாலே வாக்குவாதங்கள் மோதல்கள் ஏற்படுவது சகஜமாகி உள்ளது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற ஈ.டி.எம்.சி ஹவுஷில்ல்நடைபெற்ற கூட்டத்தில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மோதிக்கொண்டனர்.

இதனை அடுத்து ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மோகினி ஜீன்வால் மற்றும் மனோஜ் குமார் தியாகி ஆகியோர் 15 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். குடிமை அமைப்புகளின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டது மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பு தொடர்பாக இந்த மோதல் நடைபெற்றது என கூறப்படுகிறது. இது குறித்து வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிற நிலையில், ஜீன்வால் மற்றும் மற்றொரு கவுன்சிலர் ஒருவருக்கொருவர் பாதணிகளால் அடிக்க முயற்சி செய்கின்றனர்.