அருணாச்சல பிரதேச எல்லையில் 5 பேரை கடத்திய சீன ராணுவம்.? – காங்கிரஸ் எம்.எல்.ஏ நினோங் எரிங் ட்வீட்.!

அருணாச்சல பிரதேசம் மேல் சுமன்சுரி மாவட்டத்தில் இருந்து 5 பேரை சீன ராணுவ கடத்தியாக கூறப்படுகிறது. இதனை அம்மாநில எம்.எல்.ஏ நினோங் எரிங் தெரிவித்துள்ளார்.

அருணாச்சல பிரதேசம் மேல் சுமன்சுரி மாவட்டத்தில் இருந்து 5 பேரை சீன ராணுவ கடத்தியாக கூறப்படுகிறது. இதனை அம்மாநில எம்.எல்.ஏ நினோங் எரிங் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் முதல் லடாக்கில் இந்திய – சீனா இடையேயான எல்லை பிரச்னை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய ராணுவ தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், அருணாச்சல பிரதேசம் மேல் சுமன்சுரி மாவட்டத்தில் இருந்து 5 பேரை சீன ராணுவ கடத்தியாக கூறப்படுகிறது. உள்ளூர் ஊடக செய்தியின்படி, 5 பேரும் அண்டர் நாச்சோ வட்டத்தில் உள்ள செரா 7 என்ற ரோந்து பகுதியிலிருந்த்து கடத்தப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் ரசியா மற்றும் சீனா பாதுகாப்பு அமைச்சர்களை ராஜ்நாத் சிங் சந்திக்கும் நேரத்தில் இந்த கடத்தல் நடந்துள்ளதாக அருணாச்சல பிரதேச எம்.எல்.ஏ நினோங் எரிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டரில் பக்கத்தில், அதிர்ச்சி செய்திகள், நமது மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் அப்பர் சுபன்சிரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தால் (பி.எல்.ஏ) கடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.சில மாதங்களுக்கு முன்பு, இதேபோன்ற சம்பவம் நடந்தது என்றும் சீனாவுக்கு தக்க பதிலடி வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

unknown node