டெல்லி :இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த மாதம் தங்கக் கடன் வாங்குவது தொடர்பாக புதிய விதிகளை வெளியிட்டது. அதன்படி, தங்க நகைக் கடன் வாங்குபவர்கள் நகைக்கு நீங்கள்தான் உரிமையாளர் என்ற ஆதாரத்தை வழங்க வேண்டும். தனிநபர்கள் 1 கிலோ வரை மட்டுமே அடகு வைக்க முடியும்.
தங்க நகையின் மதிப்பில் 75% மட்டுமே நகைக் கடன் வழங்கப்படும். நீங்கள் வழங்கும் நகை 22 காரட் (அ) அதற்கு மேல் இருக்க வேண்டும். இந்த புதிய அறிவிப்பால் நகைக் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்டம் அபாயம் ஏற்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி நகைக் கடன் குறித்து விதித்துள்ள கட்டுப்பாடுகள், இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்நிலையில், தங்க நகைக் கடனுக்கான நிபந்தனைகளை ஆர்பிஐ கைவிட வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இப்பொழுது, தங்கக் கடன்கள் குறித்த புதிய வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிடும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் வழிகாட்டுதலின் கீழ் நிதிச் சேவைகள் துறை இந்த வரைவை ஆய்வு செய்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் பிறகு, சிறிய தங்கக் கடன் வாடிக்கையாளர்களின் தேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க, DFS மத்திய வங்கிக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. புதிய விதிகளுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் இந்த பரிந்துரைகளை செய்துள்ளது. அதன்படி, தங்கக் கடன்களுக்கான ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள் சிறிய அளவு தங்கக் கடன்களைப் பெறுபவர்களைப் பாதிக்காது.
இது தொடர்பாக, நிதி அமைச்சகம் சமூக ஊடக தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட இந்தப் பதிவில், தங்கக் கடன்களுக்கான ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டுதல்களை அரசாங்கம் ஆய்வு செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக கடன் வாங்குவோருக்கு புதிய விதிகளில் இருந்து விலக்களிக்க ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தலாம் என கூறப்படுகிறது.
unknown node