சிபிஎஸ்இ 10,+2 பொதுத்தேர்வு அட்டவணை, சில கூடுதல் மாற்றங்களுடன் வெளியாகும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்தார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தரப்பில் அறிவிக்கப்பட்டது.
தற்பொழுது, சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார். ஆனால் தற்பொழுது சில கூடுதல் மாற்றங்களுடன் மே 18 ஆம் தேதி வெளியாகும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
unknown node