பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,
காஷ்மீர் தாக்குதலால் விரக்தியில் இருக்கும் நிலையில், பாகிஸ்தான் தூதரகத்திற்குள் கேக்கை கொண்டு சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர் கேக்கை எடுத்துச் சென்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது, பத்திரிக்கையாளர்கள் அவரிடம், கேக் எதற்கு, யாருக்கு? கொண்டாட்டமா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
ஆனால் அவர் எதற்காக கேக்கை உள்ளே எடுத்துச் சென்றார் என்பது குறித்து எதுவும் கூறவில்லை. முன்னதாக, தூதரகத்திற்கு கொடுக்கப்பட்டு இருந்த பாதுகாப்பை இந்திய அரசு வாபஸ் பெற்றது. இதனிடையே, இன்று தூதரக அலுவலகத்திற்கு வெளியே பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
What an utter shame! Pakistani Official spotted taking cake inside Pakistan High Commission to India in New Delhi a day after GOI cuts all diplomatic ties with the terrorist nation.#Pahalgam #Pakistan #Terrorism #Terrorist #News #pahalgamattack pic.twitter.com/mOpnVktJ7M
— Harsh Trivedi (@harshtrivediii) April 24, 2025
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானை ராணுவ ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் பழிவாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நேற்றைய தினம் இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், பஹல்காமில் நடைபெற்ற கொடுஞ்செயலுக்கு பாகிஸ்தான் தூதரகத்தில், அதிகாரிகள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட இருந்ததாக சந்தேகிக்க தொடங்கினர். இந்த வீடியோவை பார்த்த இந்தியர்கள் அனைவரும் கொந்தளிப்பை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025
பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,
April 24, 2025