ஹிமாச்சல பிரதேசத்தில் 11 சுற்றுலா பயணிகளுடன் சென்ற ரோப் கார் அந்தரத்தில் சிக்கிய நிலையில், மீட்பு பணி தீவிரம்.
ஹிமாச்சல பிரதேசம் சோலன் மாவட்டத்தில் பர்வானூ டிம்பர் டிரெயிலில் 11 சுற்றுலா பயணிகளுடன் சென்ற ரோப் கார் பழுதாகி அந்தரத்தில் சிக்கிய நிலையில், மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்தரத்தில் தொங்கும் ரோப் காரில் இருந்து 2 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 9 பேர் இன்னும் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் NDRF குழு ( தேசிய பேரிடர் குழு) ஈடுபட்டு வருகிறது.
தனியாருக்கு சொந்தமான ரிசார்ட் ஒன்றில் உள்ள ரோப் காரில் சுற்றுலா பயணிகள் சென்றபோது விபத்துக்குள்ளானது. ரோப் கார் பழுதாகி அந்தரத்தில் தொங்கும் இடத்துக்கு தேசிய பெரிதா குழு விரைந்து, துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த ஏப்ரலில் ஜார்கண்டில் நடந்த ரோப் கார் விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node