#Breaking: மினிமம் பேலன்ஸ் தேவையில்லை – எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு.!

Default Image

எஸ்.பி.ஐ வங்கியின் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச வைப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என எஸ்.பி.ஐ தலைவர் ரஜ்னீஷ் குமார் அதிரடியாக அறிவித்துள்ளார். 44.51 கோடி வாடிக்கையாளர்கள் இந்த அறிவிப்பின் மூலம் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது. மாநகரம், நகரம் மற்றும் கிராமப்புறத்தில் இருப்பவர்கள் அனைவரும் தங்களது வங்கி கணக்கில் ரூ.3,000, ரூ.2,000, ரூ.1000 என குறைந்தபட்ச வைப்புத் தொகையை வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்த நிலையில், அப்படி இல்லையென்றால் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து ரூ.5 முதல் ரூ.15 வரை அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், தற்போது குறைந்தபட்ச வைப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளது. இதற்குமுன் குறைந்தபட்ச வைப்புத்தொகை இல்லை எனக் கூறி, அடிக்கடி பணம் எடுக்கப்பட்டு வந்ததால் வாடிக்கையாளர்கள் பலர் எஸ்.பி.ஐ வங்கி கணக்கை பயன்படுத்துவதை நிறுத்தினர். இதன் விளைவு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என வங்கி தலைமை அறிவித்துள்ளது. இதையடுத்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சந்திர சேகர் கவுட் என்பவர் கேட்ட கேள்விக்கு, 2019ம் ஆண்டு மட்டும் குறைந்தபட்சம்  வைப்புத்தொகை இல்லை என கூறி, 388 கோடி வங்கி கணக்குகளில் இருந்து ரூ.235 கோடி வரை எஸ்.பி.ஐ அபராதம் வசூலித்துள்ளது என மும்பையில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கி தகவல் அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்