சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை, சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள் பல்லாவரம் வரையும், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை, செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரையும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்நிலையில், ரயில் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் நலன் […]
தமிழகத்தில் இன்று முதல் ‘இ-பதிவு’ கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில்,தற்போது திருமணத்திற்கான அனுமதி நீக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மே 10 ஆம் தேதியில் இருந்து மே 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஆனால்,முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் தேவையான ஒத்துழைப்பை வழங்காமல்,கூட்டம் கூட்டமாகவும்,சமூக விலகலை கடைப்பிடிக்காமலும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்காரணமாக,தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.அதன்படி,அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் 10 வரை மட்டுமே […]
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை. இதனிடையே மகாத்மா காந்தி பிறந்த நாளான இன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழகமெங்கும் இன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உள்ளாட்சித்துறை வெளியிட்டது. இதன்படி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்களை நடத்தவேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கிராம சபை பாதுகாப்பான பொது […]
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று இயக்கப்பட இருந்த 82 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நாடு முழுவதும் கடந்த 60 நாட்களாக மேலாக அமலில் இருக்கும் 4 ஆம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உள்நாட்டு விமான சேவை இன்று தொடங்கியுள்ளது. இந்த உள்நாட்டு விமான சேவைக்கு பல்வேறு மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழக அரசு 25 உள்நாட்டு விமானங்களை மட்டுமே தமிழகத்திற்கு இயக்க அனுமதி அளித்துள்ள […]
எஸ்.பி.ஐ வங்கியின் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச வைப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என எஸ்.பி.ஐ தலைவர் ரஜ்னீஷ் குமார் அதிரடியாக அறிவித்துள்ளார். 44.51 கோடி வாடிக்கையாளர்கள் இந்த அறிவிப்பின் மூலம் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது. மாநகரம், நகரம் மற்றும் கிராமப்புறத்தில் இருப்பவர்கள் அனைவரும் தங்களது வங்கி கணக்கில் ரூ.3,000, ரூ.2,000, ரூ.1000 என குறைந்தபட்ச வைப்புத் தொகையை வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்த நிலையில், அப்படி இல்லையென்றால் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து ரூ.5 முதல் ரூ.15 வரை […]
ஹோலி கொண்டாட்டங்களில் பங்கேற்க போவதில்லை என பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஹோலி இந்தியர்களுக்கான முக்கியமான பண்டிகை என்றாலும், கொரோனா பாதிப்பு காரணமாக இந்த வருடம் கொண்டாட்டங்களில் பங்கேற்க போவதில்லை என்று குறிப்பிட்டார். பின்னர் பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், குடும்ப நலத்தை கவனித்து கொள்ள வேண்டும் என்றும் அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். Holi is […]
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இதுவரை 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இதன் காரணமாக கூகுள் இந்த ஆண்டின் மிகப்பெரிய நிகழ்வான கலிபோர்னியாவின் மவுண்டன் வியூவில் நடத்த இருந்த ஐ / ஓ டெவலப்பர் மாநாட்டை ரத்து செய்துள்ளது. இந்த அறிவிப்பை நிறுவனம் பங்கேற்பாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளது. இந்த நிகழ்ச்சி முதலில் மே 12 முதல் 14 வரை நடத்த திட்டமிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இலங்கை […]
2020-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி (நேற்று) முதல் வங்கிகளில் பல்வேறு மாற்றங்களும், புதிய விதிமுறைகளும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. தற்போது வாடிக்கையாளர்கள் மேக்னடிக் டெபிட் கார்டுகளை வைத்திருந்தால், இன்று முதல் அந்த கார்டுகள் செயல்பாடு ரத்து செய்யப்படும். டெபிட் மற்றும் ஏடிஎம் கார்டு : அனைத்து வங்கிகளும், வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் டெபிட் கார்டுகளை வழங்கியுள்ளன. ஆனால், ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி, பழைய மேக்னடிக் டெபிட் கார்டுகளை மாற்றி, இஎம்வி சிப் பொருத்தப்பட்ட டெபிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் […]
5 மற்றும் 8_ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்த மத்திய அரசு திட்ட வகுத்தது. இந்த ஆண்டு முதல் தமிழகத்தில் 5 மற்றும் 8_ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. ஒரு மாணவன் +2 முடிப்பதற்குள் 5 பொது தேர்வை எதிர்கொள்கின்றான் எனவே 5 மற்றும் 8_ஆம் வகுப்புக்கு வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசு 5 மற்றும் 8_ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தலாம் […]
டெல்லியில் குளிர் உச்சகட்டத்தை அடைந்துள்ளதால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான குளிர் நிலவுகின்றது.குளிரின் அளவானது 5.4 டிகிரி செல்சியஸிற்கு சென்று குளிர் வாட்டுவதாக மக்களை வானிலை மையம் தெரிவித்துள்ளது. பொது இடங்களில் மக்கள் தீயை மூட்டி குளிரின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு வருகின்றனர். குளிரின் தாக்கத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் விமான போக்குவரத்து , ரயில் போக்குவரத்தும் முடங்கி பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளர்.
அன்பளிப்பு பொருட்கள் இறக்குமதியில் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அவற்றிற்கான சுங்கவரி விலக்கு சலுகையை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அன்பளிப்பு பொருட்களுக்கு தற்பொழுது விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது.இதை பயன்படுத்தி சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஆன்லைன் நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக தொடர் புகார்கள் எழுப்பப்படுகின்றன. இந்தியாவில் இருந்து சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஆன்லைன் நிறுவனங்களுக்கு தினமும் ஆர்டர்கள் […]