ஒரே ஒரு முறை மணிப்பூருக்கு வாங்க... பிரதமர் மோடிக்கு குத்துச்சண்டை வீரர் கண்ணீர் மல்க கோரிக்கை!

Chungreng Koren : பிரதமர் மோடி ஒருமுறையாவது மணிப்பூர் சென்று வரவேண்டும் என குத்துச்சண்டை சாம்பியன் சங்க்ரங் கோரன் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.

Chungreng Koren

Chungreng Koren : பிரதமர் மோடி ஒருமுறையாவது மணிப்பூர் சென்று வரவேண்டும் என குத்துச்சண்டை சாம்பியன் சங்க்ரங் கோரன் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.

மணிப்பூரைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர்சங்க்ரங் கோரனின் வீடியோ கிளிப்ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், இன வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்கு சென்று அமைதியை மீட்டெடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read More –திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2, காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஏன்.? திருமா விளக்கம்…

மேட்ரிக்ஸ் ஃபைட் நைட் (எம்எஃப்என்) சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு, அதில் சாம்பியன் பட்டம் வென்ற குத்துச்சண்டை வீரர் சங்க்ரங் கோரனிடம் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது. அந்த பேட்டியில் அவர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க மணிப்பூர் வன்முறை குறித்து பேசியுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

Read More –தேமுதிக கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம்? பிடிவாதம் பிடிக்கும் பிரேமலதா!

அதன்படி, அந்த வீடியோவில் குத்துச்சண்டை வீரர் சங்க்ரங் கோரன் கூறியதாவது, மணிப்பூர் மாநிலத்தில் சுமார் ஒரு ஆண்டுக்கு மேலாக வன்முறை தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறையால் மணிப்பூர் மக்கள் பலர் உயிரிழந்து வரும் நிலையில், பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Read More– Oscars 2024: ஆஸ்கர் விருதுகள் வென்றவர்களின் முழு பட்டியல் இதோ.!

மணிப்பூரில் உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு நிலவுகிறது. குழந்தைகள் சரியாக படிக்க முடியவில்லை. அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, தயவு செய்து ஒரே ஒரு முறை பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூருக்கு வந்து அமைதியை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது எனது தாழ்மையான வேண்டுகோள் எனவும் கூறியுள்ளார்.