மணிப்பூர் : ஜிரிபாம் மாவட்டத்தில் போரோபெக்ரா என்னும் கிராமத்தில் கடந்த 11ம் தேதி நடந்த துப்பாக்கி சண்டையில், நிவாரண முகாமை தாக்கியுள்ளனர். இதில், ஆறு பேர் கலவரக்காரர்களால் கடத்தப்பட்டனர். தற்பொழுது, ஜிரிபாம் மாவட்டத்தில் 6 பேர் கடத்திச் சென்று கொல்லப்பட்டதால் நேற்று (வெள்ளிக் கிழமை) இரவு முதல் மீண்டும் பதற்றமான சூழல் நிலவத் தொடங்கியது. இப்படி இருக்கையில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நேற்று இரவு பாஜகவை சேர்ந்த முதலமைச்சர் பைரன் சிங்கின் வீட்டைத் தாக்க முயற்சி செய்ததால் […]
இம்பால் : மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு தொடங்கிய குக்கி, மெய்தேய் இனத்தினரிடையே ஏற்பட்ட கலவரமானது கடந்த சில மாதங்களில் சற்று அமைதியாக இருந்த நிலையில் , தற்போது கடந்த ஒரு வாரமாக மீண்டும் தாக்குதல்கள் தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான சூழலில், மணிப்பூர் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மணிப்பூரில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்றும் மாணவர் அமைப்பினர் தலைநகர் இம்பால் சாலையில் நீண்ட பேரணி ஒன்றை நடத்தினர். விமான நிலைய சாலை அருகே நடந்த […]
மணிப்பூர் : தலைநகர் இம்பாலில் அம்மாநிலத் தலைமைச் செயலக கட்டடம், முதல்வர் பிரேன்சிங்கின் பங்களா ஆகியவை உள்ளன. இந்த நிலையில், முதல்வர் பங்களா அருகே அங்கிருந்து சில மீட்டர் தூரத்தில் உள்ள கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலின்பேரில் சென்ற தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தினர். தற்போது அங்கு யாரும் வசிக்கவில்லை என்று கூறியுள்ள காவல்துறை, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. தீ விபத்துக்குள்ளான வீடு கோவாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் […]
Manipur Violence : மணிப்பூரில் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரு பெண்கள் குறித்தும், அங்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்தும் CBI அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் நேர்ந்த கலவரம் இந்தியா முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிலும், ஒரு கொடூர கும்பல் இரு பெண்களை நிர்வாணமாக வலுக்கட்டாயமாக இழுத்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலரது நெஞ்சத்தையும் பதற வைத்தது. இந்த கொடூர சம்பவம் குறித்து, CBI […]
Election2024: மணிப்பூரில் வன்முறை வெடித்த 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் முதல்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்றது. இதன்பின் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா, மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் கடந்த 26ம் தேதி நடைபெற்று நிறைவு பெற்றது. இந்த சூழலில் மணிப்பூரில் […]
Chungreng Koren : பிரதமர் மோடி ஒருமுறையாவது மணிப்பூர் சென்று வரவேண்டும் என குத்துச்சண்டை சாம்பியன் சங்க்ரங் கோரன் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். மணிப்பூரைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் சங்க்ரங் கோரனின் வீடியோ கிளிப் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், இன வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்கு சென்று அமைதியை மீட்டெடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More – திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2, காங்கிரஸுக்கு 10 […]
கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஆயுதம் எழுதிய நபர்களுடன் சுராசந்த்பூர் காவல்நிலைய தலைமை காவலர் சியாம்லால் பால் புகைப்படம் எடுத்து இருந்தார். அந்த புகைப்படம் உள்ளூரில் வைரலானது. இந்த புகைப்படம் வெளியானதை தொடர்ந்து சியாம்லால் மீது காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டார். மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி – ஃபரூக் அப்துல்லா அறிவிப்பு சுராசந்த்பூர் காவல் கண்காணிப்பாளர் சிவானந்த் சர்வே, ஆயுதம் ஏந்திய நபர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதால் தலைமை காவலர் சியாம்லால் பால் மறுஅறிவிப்பு […]
மணிப்பூர் மாநிலத்தில் புதிய வன்முறை வெடித்ததை அடுத்து, மணிப்பூர் அரசு நேற்று (திங்களன்று) தௌபால் மற்றும் இம்பால் போன்ற மேற்கு மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. நேற்று மாலை தௌபால் மாவட்டத்தில் உள்ள லிலாங் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த மோதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களது உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. பின்னர், அம்மாநில முதல்வர் என் பிரேன் சிங், லிலாங்கில் வசிப்பவர்களிடம் […]