மகாராஷ்டிராவில் கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு 476 பேர் பலி!

In Maharashtra, 5,763 people have been infected with black fungus and 476 have died so far, according to the state health department.

மகாராஷ்டிராவில் கருப்பு பூஞ்சைத் தொற்றால் 5,763 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 476 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சவாலாக தற்பொழுது கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. கருப்பு, மஞ்சள், வெள்ளை என பூஞ்சை தொற்றுகள் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவதுடன், இதன் மூலம் பல உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிக அளவில் காணப்படும் நிலையில், அங்கு கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. இது குறித்து மகாராஷ்டிர மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இதுவரை மகாராஷ்டிராவில் 5,763பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 476 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.