வீட்டு வேலைக்கார பெண்ணை சித்திரவதை செய்த பாஜக தலைவி கைது
வீட்டு வேலைக்காரியை சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக தலைவி சீமா பத்ரா கைது செய்யப்பட்டார்.
சமீபத்தில் பாஜக தலைவி சீமா பத்ரா தனது வீட்டில் பணிபுரிந்து வந்த பழங்குடியின பெண்ணை 6 ஆண்டுகளாக சித்திரவதை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை(ஆகஸ்ட் 29)அன்று அவரை ஜார்க்கண்ட் தலைவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் பெரும் போராட்டங்களுக்கு பிறகு தனது வீட்டு வேலைக்கார பெண்ணை சித்திரவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் தற்போது ராஞ்சி காவல்துறையால் சீமா பத்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மூத்த போலீஸ் சூப்பிரண்டு கிஷோர் கௌஷால் கூறுகையில், “தற்போது பத்ரா போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் குறித்து ஐபிசி மற்றும் எஸ்சி/எஸ்டி சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும்” கூறினார்.
பாதிக்கப்பட்ட அந்த பழங்குடியின பெண் பாஜக தலைவி வீட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் மிகவும் பலவீனமாகவும், மன உளைச்சலுக்கு உள்ளாகவும் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் பாஜக தலைவி சீமா பத்ரா வீட்டில் மீட்கப்பட்ட பழங்குடியின பணிப்பெண் சுனிதா(29) மருத்துவமனை படுக்கையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
रांची में रिटायर्ड IAS महेश्वर पात्रा की पत्नी भाजपा नेता सीमा पात्रा ने आदिवासी महिला सुनीता खाखा को 8 साल तक अपने घर में कैद कर सूरज भी नहीं देखने दिया। सुनीता से जीभ से फर्श साफ करवाया। पेशाब चटाया। रॉड से दांत तोड़ डाले। गर्म तबे से चेहरा जला डाला। शर्मनाक। #ArrestSeemaPatra pic.twitter.com/oTdJXMINJ1
— Hansraj Meena (@HansrajMeena) August 30, 2022