வீட்டு வேலைக்காரியை சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக தலைவி சீமா பத்ரா கைது செய்யப்பட்டார். சமீபத்தில் பாஜக தலைவி சீமா பத்ரா தனது வீட்டில் பணிபுரிந்து வந்த பழங்குடியின பெண்ணை 6 ஆண்டுகளாக சித்திரவதை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை(ஆகஸ்ட் 29)அன்று அவரை ஜார்க்கண்ட் தலைவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் பெரும் போராட்டங்களுக்கு பிறகு தனது வீட்டு வேலைக்கார பெண்ணை சித்திரவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் தற்போது ராஞ்சி காவல்துறையால் […]
பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்கா பஞ்சாப் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் காவல்துறை அதன் சைபர்செல்லில் பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்காவை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ள சம்பவம் பாஜகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. BJP leader Tajinder Pal Singh Bagga arrested by Punjab Police: Aam Aadmi Party MLA Naresh Balyan pic.twitter.com/ibrebvNCeU — ANI […]
பவானிப்பூர் சட்டமன்றத் தொகுதியிலும் தான் தோல்வியடையக்கூடும் என்று முதல்வர் மம்தா பானர்ஜிக்குத் தெரியும் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் பவானிப்பூர், ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,மேற்குவங்க பவானிப்பூர் இடைத்தேர்தலில் போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி செப்டம்பர் 10 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். நடந்து முடிந்த சட்டமன்ற […]
தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்கு வாங்க பா.ஜ.க தலைவர் அனுபம் ஹஸ்ராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் பல்வேறு அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் இதனால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது மேற்கு வங்கத்தின் பாஜக தலைவர் அனுபம் ஹஸ்ரா அவர்களுக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இவருக்கு தற்பொழுது கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் […]
பாட்னாவில் பாஜக ஜெயந்த் பகுதி துணைத் தலைவர் ராஜேஷ் குமார் ஜா இன்று காலை பீகார் தலைநகர் பாட்னாவில் அடையாளம் தெரியாத சில கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் இன்று காலை 6.30 மணியளவில் சீதா ராம் திருமண மண்டபத்தில் நடந்தது. துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினர். இது குறித்து, பாட்னா பகுதியின் காவல் துறை கூறுகையில், கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், குடும்ப உறுப்பினர்களிடையே தகராறு ஏற்பட்டிருக்கலாம் என […]
ஜம்மு-காஷ்மீரில் உள்ள புட்கம் மாவட்டத்தில் மொஹிண்ட்போரா பகுதியில் வசிக்கும் அப்துல் ஹமீத் நஜர் (38) இன்று காலை நடைப்பயிற்சி செய்து கொண்டு இருந்தபோது, ஓம்போரா அருகே அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த அவர் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.கடந்த ஒரு வாரத்தில் பாஜக நிர்வாகிகள் மீது தாக்கல் நடைபெற்று வருகிறது. இது மூன்றாவது தாக்குதல் ஆகும். இதற்கு முன் கடந்த புதன்கிழமை தெற்கு காஷ்மீரில் காசிகுண்டில் உள்ள பாஜக […]
தமிழகத்தில் ஊரடங்கால் கிடைத்த நன்மைகளில் முக்கியமானது மது இல்லாத தமிழர்களாக நாம் மாறியிருப்பதுதான் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அதில், தமிழகத்தில் ஊரடங்கால் கிடைத்த நன்மைகளில் முக்கியமானது மது இல்லாத தமிழர்களாக நாம் மாறியிருப்பதுதான் என்றும் தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த கிடைத்திருக்கும் இதுதான் சிறந்த வாய்ப்பு என்று கூறியுள்ளார். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்துகொண்ட நிரந்தரமாக மதுவிலக்கை அமல்படுத்த […]
பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்த் மீதான மாணவி கற்பழிப்பு குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரி மாணவி ஒருவர் முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்து வருவதாகவும் தன்னை கொலை செய்துவிடுவதாகவும் அச்சுறுத்துகின்றனர் என்று சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார் .இதனிடையே அந்த மாணவியின் தந்தை சின்மயானந்த் தங்களை அச்சுறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். கடந்த வாரத்தில் கற்பழிப்பு குற்றச்சாட்டை விசாரிக்கும் சிறப்பு விசாரணைக் […]