அடுத்த ஆண்டு மார்ச்சில் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பனிஸ், இந்தியா வருவதாக அறிவித்திருக்கிறார்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ், இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான எகானமிக் கோ-ஆபரேஷன் ட்ரேட் அக்ரீமெண்ட் (ECTA) ஒப்பந்தம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து இரு நாடுகளுக்கிடையே உறவும் மேம்பட இந்தியா வருவதாக அறிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து தான் இது குறித்த பேசியதாக அல்பனிஸ் கூறினார். அடுத்த ஆண்டு இந்தியா வரும் ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியாவில் நடைபெறும் பேச்சுவார்த்தையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பொருளாதார உறவுகள் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறினார்.
இதற்கு முன்னதாக பாலியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமருடன் சந்தித்து முக்கிய உலக பிரச்சனைகள் குறித்தும், இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி காக்கும் பொருட்டு தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
மேலும், பாதுகாப்பு, வர்த்தகம், கல்வி, தூய்மை (புதுப்பிக்கக்கூடிய) ஆற்றல் குறித்தும் இந்தியா-ஆஸ்திரேலியா இரு நாடுகளுக்கிடையே உள்ள ஒத்துழைப்பு பற்றியும் இரு தலைவர்களும் உரையாடிக்கொண்டனர்.