அண்ணாமலையின் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிப்ரவரி 18ஆம் தேதி தமிழகத்திற்கு வரும் மோடி, பாஜக பொதுக் கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார். சமீபத்தில், கேலோ இந்தியா தொடக்க விழாவிற்காக அவர் சென்னை வந்திருந்தார். பின்னர் திருச்சி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களும் சென்றார். ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, இங்குள்ள கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு, அதன் பின் 3நாள் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார். இந்த நிலையில், மீண்டும் பிரதமர் தமிழகம் வருகைக்கான ஏற்பாடுகள் […]
கிறிஸ்துமஸ் (Christmas) என்பது ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கக் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த விழா வருகின்ற 25-ம் தேதி (இன்று) உலகமெங்கும் கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பலரும் தங்களது கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், அரசியல் பிரமுகர்கள் பலரும் தங்கள் வாழ்த்து செய்திகளை பகிர்ந்து கொண்டனர். அந்த வரிசையில், இதற்கு முன்னதாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ஓ பன்னீர்செல்வம், டி. டி. வி. தினகரன், விஜயகாந்த், ஆகியோர் தங்கள் […]
பல மல்யுத்த வீராங்கனைகள் மல்யுத்த சம்மேளனத்தில் தலைவராக இருந்த பிரிட்ஜ் பூஷன் சிங் மீது பாலியல் புகார் கூறினர். இதைத்தொடர்ந்து டெல்லி போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் பிரிட்ஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த தேர்தலில் நிற்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பின்னர் பிரிட்ஜ் பூஷன் சிங் நண்பருமான சஞ்சய் குமார் […]
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நான்கு மாநிலங்களில் இரண்டில் பாஜக முன்னிலையிலும், இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும் உள்ளது. அதன்படி 199 இடங்களைக் கொண்ட ராஜஸ்தானில் சமீபத்திய புள்ளிவிவரங்கள் படி பாரதிய ஜனதா 71 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதே சமயம் ஆளும் கட்சியான காங்கிரஸ் 46 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 230 இடங்களைக் கொண்ட மத்தியப்பிரதேசத்தில் பாஜக – 57 இடங்களில் முன்னிலையிலும் […]
சமீபத்தில் 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் முடிவுகள் இன்றும், மிசோரமில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. ஐந்து மாநிலங்களின் முடிவுகள் ஒரே நாளில் இன்று வெளியிடப்பட இருந்த நிலையில், பின்னர் தேர்தல் ஆணையம் தனது முடிவை மாற்றி, மிசோரம் தேர்தல் முடிவுகளை டிசம்பர் 4ம் தேதி (நாளை) அறிவிக்க முடிவு செய்தது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் […]
நடந்து முடிந்த மாநில சட்டசபை தேர்தல்களின் முடிவுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை வெளியாகவுள்ளது. மிசோரமில் நவம்பர் 7ஆம் தேதியும், சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 25ஆம் தேதியும், தெலுங்கானாவில் நவம்பர் 30 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தல்களுக்கான கருத்துக் கணிப்பில் ராஜஸ்தானில் மட்டுமே பாஜக வெற்றி பெறும் என்றும் அதேசமயம் சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் மத்திய […]
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களின் முடிவுகள் டிசம்பர் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெளியாகவுள்ளது. மிசோரமில் நவம்பர் 7ஆம் தேதியும், சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 25ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இன்று தெலுங்கானாவில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களுக்கான கருத்துக் கணிப்புகள் வரத்தொடங்கியுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் […]
பிரதமர் மோடியை சந்தித்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள் நேற்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார். அந்த பதிவில், பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மிகச் சிறந்ததாக இருந்தது. அவருக்கு எனது நன்றி. தங்களுடைய ஆட்சி அமைந்த பின் இந்தியாவில் குறுகிய காலத்தில் பெரிய அளவிலான தொழில்நுட்ப மாற்றங்களை பெற்றுள்ளதாகவும் இது சிறந்த உத்வேகத்தை அளிப்பதாகவும் […]
ஜனநாயகத்தின் தூணாக விளங்கக் கூடிய தேர்தல் ஆணையத்தை தன் கைப்பாவையாக மாற்ற முற்படும் மோடி ஜனநாயக விரோதப் போக்கை காங்கிரஸ் கட்சி வேடிக்கை பார்க்காது. தலைமை தேர்தல் அதிகாரியை நியமித்தது தொடர்பாக மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டுள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து கே.எஸ்.அழகிரி அடுத்த மாதம் பணி ஓய்வு பெற வேண்டிய அருண் கோயலை விருப்ப ஓய்வு கொடுக்க வைத்து மறுநாளே தேர்தல் ஆணையராக நியமிக்க வேண்டிய கட்டாயம் என்ன என்பதை மோடி […]
இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ளும் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்குத் தான் உள்ளதா? ஒன்றிய அரசுக்கு இல்லையா? என ஜோதிமணி எம்.பி கேள்வி 2018-19ல் கேரளா பெருவெள்ளத்தின்போது நிவாரணமாக வழங்கப்பட்ட, 89 டன் அரிசிக்கான தொகை, 205.81 கோடியை தரச்சொல்லி கேரள அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, திரு.மோடியின் நண்பர்கள் வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொள்ளையடித்தபின் நாட்டை விட்டு பத்திரமாக அனுப்பிவைக்கப்படுவார்கள்.ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்த நிவாரணத்தை […]
அடுத்த ஆண்டு மார்ச்சில் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பனிஸ், இந்தியா வருவதாக அறிவித்திருக்கிறார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ், இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான எகானமிக் கோ-ஆபரேஷன் ட்ரேட் அக்ரீமெண்ட் (ECTA) ஒப்பந்தம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து இரு நாடுகளுக்கிடையே உறவும் மேம்பட இந்தியா வருவதாக அறிவித்துள்ளார். இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து தான் இது குறித்த பேசியதாக அல்பனிஸ் கூறினார். அடுத்த ஆண்டு இந்தியா […]
கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற ஆவண செய்யும்படி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற காந்திகிராம பல்கலைக்கழக பட்டளிப்பு விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர் என் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் உரையாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின் ” கல்வி மட்டுமே யாராலும், எப்போதும் பறித்துக் கொள்ள முடியாத சொத்து என்றும் தரமான கல்வியை வழங்குவது மாநில அரசின் கடமை, […]
பிரதமர் மோடி பெங்களூருவிலிருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்தடைந்தார். திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, பெங்களூருவிலிருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு தற்போது வந்தடைந்துள்ளார். பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடியுடன், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக முதல்வர் ஸ்டாலின், மற்ற மூத்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய […]
நாளை மறுநாள் திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக பட்டளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகத்தின் வருகை தருகிறார். திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி,தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்க உள்ளனர். […]
மத்திய அரசை பொருத்தவரையில் இந்திக்கு தாய்ப்பால், மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பால் என்ற நிலையில் தான் செயல்பட்டு வருகிறது என அமைச்சர் ஏ.வ.வேலு பேச்சு. திமுக சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையாற்றினார். இந்தி திணிப்பு தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. நாமும் தொடர்ந்து இந்தியை எதிர்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். மத்திய அரசை பொருத்தவரையில் இந்திக்கு தாய்ப்பால், மற்ற மொழிகளுக்கு […]
கார்ப்பரேட் மற்றும் சனாதனம்ஆகிய 2ம் தான் மோடி அரசின் கொள்கை என திருமாவளவன் விமர்சனம். சென்னை சைதாப்பேட்டையில் விசிக சார்பில் இந்தி திணிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜிஎஸ்டி நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்,தமிழக மீனவர்கள் சுட்டு கொள்ளப்பட்டத்தை கண்டித்து, சமாதானத்தை வேர் அறுப்போம்,மொழி போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தில் பேசிய திருமாவளவன், ஒவ்வொரு தேசிய […]
லவர பாஜக, பொறுப்பற்ற முறையில், கோவையை தீவிரவாத நகரமாக சித்தரிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது என ஜோதிமணி எம்.பி ட்வீட். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கோவை கார் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விபத்து குறித்து பாஜக தரப்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கோவை ஒரு பெருமைக்குறிய தொழில் நகரம். மோடியின் மோசமான ஆட்சியில் தொழில்கள் […]
ஏழை எளிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சட்டங்கள் பிராந்திய மொழியில் எழுதப்பட வேண்டும் என பிரதமர் மோடி பேச்சு. குஜராத்தில், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டத்துறை அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்களின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் காணொளி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மிகவும் பழைமையான சட்டங்கள் நீக்கப்பட வேண்டும். ஏழை எளிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் […]
உணர்ச்சித் தூண்டல் அரசியலே போதும் என்ற மிதப்பில் மோடி ஆட்சி வெகுதூரம் சென்றுவிட்டது என கே.பாலகிருஷ்ணன் ட்வீட். ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தி 5.90% ஆக ஆக்கியுள்ளது. இதற்க்கு கே.பாலகிருஷ்ணன் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தி 5.90% ஆக ஆக்கியுள்ளது. இதனால் வீட்டுக்கடன், வங்கிக்கடன் மற்றும் பிற EMI வட்டி விகிதம் உயரும். சாதாரண உழைப்பாளிகளின் துயரம் அதிகரிக்கும். ரூபாய் […]
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி பயணம். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் போது, பிரதமர், உள்துறை அமைச்சரை ஈபிஎஸ் சந்திக்க இருப்பதாகவும், கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.