மக்களின் கவனத்திற்கு: ரூ.10,000 வரை அபராதம்… உடனே இதை செய்யுங்கள்.. 2 நாட்கள் மட்டும் டைம்.!
பான் கார்டுடன் ஆதாரை இணைக்கவில்லை என்றால் ரூ.10,000 வரை அபராதத்திற்கு வழிவகுக்கும் என அரசு எச்சரிக்கை.
பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கு கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியே கடைசி நாள் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு என தொடர்ந்து பல பிரச்சனைகள் காரணமாக அதனை இணைப்பதற்கான கால அவகாசத்தை பல முறை தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், வரும் 31ம் தேதி நாளை மறுநாள் தான் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கடைசி நாள் என்றும் அப்படி இணைக்கவில்லை என்றால், ஏப்ரல் 1ம் தேதி முதல் உங்களுடைய பான் கார்டு பயன்பாட்டில் இல்லை, அதாவது (INOPERATIVE) என வகைப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளனர்.
மேலும், முறையான பான் கார்டு இல்லாமல் இருப்பது ரூ.10,000 வரை அபராதத்திற்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, விரைவில் பான் கார்டை ஆதாருடன் இணைத்துவிடுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான் கார்டை ஆதாருடன் இணைக்கும் வழிமுறை :
முதலில் ஆன்லைனில் http://www.incometaxindiaefiling.gov.in/home என்ற வருமான வரித்துறை இணையதளத்தின் லிங்கை க்ளிக் செய்ய வேண்டும். அதன் முகப்புப் பக்கத்தில் இடது ஓரத்தில் `Link Aadhaar’ என்ற மெனுவைக் கிளிக் செய்யவும். அதில் உங்கள் பான் கார்டு எண், ஆதார் எண்ணை பதிவு செய்யவும். அடுத்து, ஆதார் கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் உங்கள் பெயரைப் பதியவும்.
iஉங்களுடைய ஆதார் கார்டில் மட்டுமே பிறந்த தேதி குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த பட்டனைக் கிளிக் செய்து angree கொடுக்கவும். அடுத்ததாக கேப்சா கோடை சரியாகக் கொடுத்ததும் `Link Aadhaar’ என்ற பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும். விவரங்கள் அனைத்தும் சரியாக இருந்தால், ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்கப்பட்டதாகச் உங்கள் எண்ணிற்கு குறுந்தகவல் வரும். ஆகையால், உடனே இதைப் பின்பற்றி பான் கார்டை ஆதாருடன் இணையுங்கள்.