பணி நியமனம் – புதுச்சேரி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

கடந்த 2016 முதல் இதுவரை எந்த நியமனங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்று புதுச்சேரி அரசு பதில்.

கடந்த 2016 முதல் இதுவரை எந்த நியமனங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்று புதுச்சேரி அரசு பதில்.

புதுச்சேரியில் அரசு பணி நியமனங்கள், விதிகளை பின்பற்றி மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பொதுப்பணித்துறையில் 10,000 பேரை சட்டவிரோதமாக பணியமர்த்த புதுச்சேரி அரசு முயற்சிப்பதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த பட்டதாரி அய்யாசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். கடந்த 2016 முதல் இதுவரை எந்த நியமனங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்று புதுச்சேரி அரசு பதில் அளித்துள்ளது.

பணி நியமனம் – புதுச்சேரி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!