சாலை ஓரமாக நடந்து சென்ற முதியவர்.. வேகமாக மோதிய கார்.! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்…

Car Hits - Highway

மகாராஷ்டிரா : மல்காபூரில் உள்ள குத்ரா புத்ருக் நெடுஞ்சாலையின் ஓரத்தில் நடந்து சென்ற முதியவர் மீது வேகமாக வந்த கார் மோதிய அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், மெரூன் நிற கார் ஒன்று அதன் பாதையில் இருந்து சற்று விலகி சாலையோரம் நடந்து செல்லும் முதியவர் மீது மோதியதை  காட்டுகிறது. சீராக வந்து கொண்டிருந்த கார் திடீரென மோதியது பார்ப்பதற்கு சோகத்தையும் வேதனையும் ஏற்படுத்துகிறது.

அது வீடியோவில் காணப்படுவது போல், கார் முதியவர் மீது மோதவும், காற்றில் தூக்கி வீசப்பட்டார். மேலும், முதியவர் மீது கார் மோதியவுடன், நின்ற கார் அவரை கண்டுகொள்ளாமல் திரும்பி வேகமாக சென்றதையும் வீடியோ காட்டுகிறது.

ஒரு தகவலின்படி, நாம்தேவ் துக்காராம் காவ்டே என்ற அடையாளம் காணப்பட்ட அவர், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முதியவரை கார் மோதிய சம்பவத்தை போலீசார் விசாரணை நடத்தி, இரு கோணங்களில் விசாரித்து வருவதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 26032025
RIP Manoj
TN GOVT
Edappadi Palanisamy
ramandeep singh yuvraj singh
LPG Lorry Strike
thambi ramaiah manoj bharathiraja