Tag: #Highway

சாலை ஓரமாக நடந்து சென்ற முதியவர்.. வேகமாக மோதிய கார்.! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்…

மகாராஷ்டிரா : மல்காபூரில் உள்ள குத்ரா புத்ருக் நெடுஞ்சாலையின் ஓரத்தில் நடந்து சென்ற முதியவர் மீது வேகமாக வந்த கார் மோதிய அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், மெரூன் நிற கார் ஒன்று அதன் பாதையில் இருந்து சற்று விலகி சாலையோரம் நடந்து செல்லும் முதியவர் மீது மோதியதை  காட்டுகிறது. சீராக வந்து கொண்டிருந்த கார் திடீரென மோதியது பார்ப்பதற்கு சோகத்தையும் வேதனையும் ஏற்படுத்துகிறது. அது வீடியோவில் […]

#Highway 3 Min Read
Car Hits - Highway

அலியா பட் அப்படி நடிச்சாங்க..நானும் அப்படி நடிக்கணும்! அடம் பிடிக்கும் ஐஸ்வர்யா மேனன்!

ஐஸ்வர்யா மேனன் : ஹைவே படத்தில் அலியா பட் நடித்த கதாபாத்திரத்தை போல ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை உள்ளதாக நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் நான் சிரித்தாள் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் தமிழில் கடைசியாக வேழம் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் அப்டியே தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார். தெலுங்கில் கடைசியாக ஸ்பை […]

#Highway 4 Min Read
Iswarya Menon

இரண்டாக உடைந்த கட்டுமானப் பணியில் இருந்த மேம்பாலம்..!

மகாராஷ்டிர மாநிலம் சிப்லூனில் மும்பை-கோவா நான்கு வழிச்சாலையில் கட்டுமானத்தில் இருந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது. மகாராஷ்டிர மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லுன் நகரில் மதியம் 2:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மும்பை-கோவா நான்கு வழிச்சாலையில் சிப்லுன் என்ற இடத்தில் கட்டுமானப் பணியில் இருந்த மேம்பாலம் தூண் இடிந்து விழுந்தது. சிறிது நேரத்தில் மேம்பாலத்தின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தது. இந்த சம்பவ இடத்தில் பயன்படுத்தப்பட்ட கிரேன் இயந்திரம் சேதமடைந்தது. எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் […]

#Highway 3 Min Read

நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை குறைக்க -உயர் நீதிமன்றம் உத்தரவு..!

நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை குறைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் சாலையில் நடந்த விபத்தில்  பெண் மருத்துவர்  ஒருவருக்கு 90% ஊனம் ஏற்பட்டது. இதனால், அவருக்கு இழப்பீடு தொகையாக 18 லட்சத்தில் இருந்து 1 கோடியே 49 லட்சமாக உயர்த்தி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்து இருந்தார். மேலும், அந்த வழக்கில் எக்ஸ்பிரஸ் சாலையில் 120 கிலோமீட்டர் வேகத்திலும், தேசிய நெடுஞ்சாலையில் 100 கிலோ மீட்டர் […]

#ChennaiHC 4 Min Read
Default Image

ஜம்மு – ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் இரண்டு பயங்கரவாதிகள் கைது !

ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் உள்ள ஜவஹர் சுரங்கப்பாதை அருகே  ஜம்முவிலிருந்து வந்த லாரியில் சந்தேகத்திற்கிடமான இரண்டு பயங்கரவாதிகளை நேற்று இரவு பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் ராணுவம் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Highway 2 Min Read
Default Image

ஆம்புலன்ஸ் வராததால் நெடுஞ்சாலையில் குழந்தை பெற்றெடுத்த பெண்…!

மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் மாவட்டத்தில் சார்ந்த கமலா பாய் என்ற கர்ப்பணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.இதை தொடர்ந்து அப்பெண்ணின் கணவர்  உடனடியாக ஜனனி எக்ஸ்பிரஸ் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து உள்ளார். தகவல் கொடுத்து நீண்ட நேரமாக காத்து கொண்டு இருந்தனர்.ஆனால் ஆம்புலன்ஸ் வராததால் கமலா பாய்க்கு பிரசவவலி அதிகமாக ஏற்பட்டு உள்ளது.இதனால் தனது இருசக்கர வாகனத்தில் கமலா பாய்யை வைத்து கொண்டு அவரது கணவர் மருத்துவமனைக்கு சென்று உள்ளார். செல்லும் வழியில் பிரசவவலி […]

#Highway 2 Min Read
Default Image

நாகை – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகள் மும்முரம்

பழுதடைந்த நாகை – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் மோசமான நிலையில் இருந்து வந்த நிலையில், 17 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கல் பண்டிகைக்குள், நாகை – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை, வாகன ஓட்டிகள் பயன்பாட்டுக்கு வரும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் கூறியுள்ளார்.

#Highway 2 Min Read
Default Image