டெல்லியில் இன்று முதல் அனைத்து பள்ளிகளும் திறப்பு....!

It has been announced that all schools in Delhi will be reopened from today.

டெல்லியில் இன்று முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த பல மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஒவ்வொரு மாநிலங்களிலும் திறக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் தலைநகர் டெல்லியிலும் கடந்த நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்ட நிலையில், டெல்லியில் காற்று மாசு அதிகரித்ததன் காரணமாக சாலைகளில் பொதுமக்கள் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

எனவே அடுத்த அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் திறக்க வேண்டாம் என கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டு அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டது. இந்நிலையில் தற்போது டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்படும் என டெல்லி கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா அவர்கள் தெரிவித்துள்ளார்.