காற்று மாசு : ஹரியானாவில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை ...!

Schools in 4 districts of Haryana have been closed due to air pollution.

காற்று மாசு காரணமாக ஹரியானாவில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு காரணமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் மட்டுமல்லாமல் பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது.

இதனை அடுத்து ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம், சோனிபட், பரிதாபாத் மற்றும் ஜஜ்ஜார் ஆகிய 4 மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.