சென்னை : நேற்று இந்தியா முழுக்க தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புத்தாடை உடுத்தி, இனிப்பு பலகாரங்கள் வழங்கி பட்டாசு வெடித்து பலரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். பட்டாசு வெடிக்க, நேர கட்டுப்பாடு, பசுமை பட்டாசுகள் என கூறினாலும் அதனால் ஏற்படும் காற்று மாசுவின் அளவும் ஆண்டுதோறும் தீபாவளி தினத்தன்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று அதிக மாசடைந்த மாவட்டமாக தலைநகர் சென்னை உருவெடுத்துள்ளது. தீபாவளி தினத்தன்று சென்னை மாநகராட்சியின் காற்று மாசு (AQI […]
டெல்லி : தலைநகர் டெல்லி காற்று மாசுவால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானாவில் விவசாய நிலங்களில் எரிக்கப்படும் பயிர் கழிவுகள் காரணமாகவும், அதீத வாகன பயன்பாடு காரணமாகவும் டெல்லி காற்றின் தரம் மிக மோசமாக மாறி வருகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கள்) டெல்லி நகரின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் AQI அளவீட்டின் படி 300ஐ கடந்துள்ளது. அதிகபட்சமாக ஆனந்த் விஹாரி பகுதியில் AQI அளவீடு 361ஆக உள்ளது. ஒட்டுமொத்தமாக சராசரி […]
இந்தியாவில் ஆண்டுக்கு 2.18 மில்லியன் இறப்புகளுக்கு வெளிப்புற காற்று மாசுபாடு காரணமாகிறது என BMJ-இல் வெளியிடப்பட்ட ஒரு மாதிரி ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையில் சீனாவிற்கு அடுத்து இந்தியா உள்ளது. சுவாசிக்கும் காற்று, குடிக்கும் குடிநீர் உள்ளிட்டவை மனிதன் உயிர் வாழ்வதற்கு முக்கிய அத்தியாவசியமான காரணிகளாகும். ஆனால், மோசமான காற்று மாசை எற்படுத்தும் விதமாக நிலக்கரி மூலம் மின் தேவையை பூர்த்தி செய்ய நினைப்பதும், போக்குவரத்து […]
ஐரோப்பிய சுற்றுச்சூழல் அமைப்பின் (EEA) அறிக்கையின்படி, கடந்த 2021இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் 2,50,000க்கும் மேற்பட்டவர்களின் மரணத்துக்கு நுண்ணிய துகள் மாசுபாடு தான் காரணம் என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. நுண் துகள்கள் அல்லது PM2.5 என்பது கார் புகைகள் அல்லது நிலக்கரி எரியும் மின் உற்பத்தி நிலையங்களின் உருவாகுவதாகும் என கூறப்படுகிறது. நுண்ணிய துகள்கள் செறிவுகள் உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகளை பூர்த்தி செய்திருந்தால், அந்த மரணங்களை தவிர்த்திருக்கலாம் என கூறபடுகிறது. அதாவது, ஐரோப்பிய சுற்றுச்சூழல் […]
டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் உள்ள ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்க பள்ளிகளுக்கு நவம்பர் 5-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அது நவம்பர் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என என்று டெல்லியின் கல்வி அமைச்சர் அதிஷி இன்று தெரிவித்துள்ளார். As pollution levels continue to remain high, primary schools in Delhi will stay closed till 10th November. For Grade 6-12, schools are […]
தலைநகர் டெல்லியில், அடிக்கடி காற்று மாசு அபாயகரமான நிலைக்கு செல்வதுண்டு. அந்த வகையில், டெல்லியில் காற்று மாசுபாடு அபாய அளவை எட்டிய நிலையில், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், இன்று காலை பல்வேறு இடங்களில் காற்றின் தரக்குறியீடு 400க்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது. அத்தியாவசியம் இல்லாத கட்டுமானப் பணிகளுக்கு தடை, டீசல் லாரிகள் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. திமுக வார்டு உறுப்பினர் மீது நடவடிக்கை […]
டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதால் இன்று முதல் தொடக்க பள்ளிகளை திறக்க டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் சமீப நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில், காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், காற்று மாசுபாடு காரணமாக கடந்த 5-ஆம் தேதி முதல், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து டெல்லி முதல்வர் உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில், தற்போது டெல்லியில் காற்றின் தரம் […]
டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதால் நாளை முதல் தொடக்க பள்ளிகளை திறக்க டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் சமீப நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில், காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், காற்று மாசுபாடு காரணமாக கடந்த 5-ஆம் தேதி முதல், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து டெல்லி முதல்வர் உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில், தற்போது டெல்லியில் காற்றின் தரம் […]
தீபாவளி என்றாலே புத்தாடை, பலகாரங்கள் இவற்றுடன் பட்டாசுகளும் தவிர்க்க முடியாதது.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவரவர் வயதுக்கேற்ற பட்டாசுகளை வெடித்து மகிழ்வர். பட்டாசுகள் மகிழ்வைத் தரும் அதே வேளையில் , அவற்றினால் ஏற்படும் ஒளி,காற்று மாசுபாடுகளும், குப்பைகளும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. தலைநகர் டெல்லியில் ஏற்கனவே காற்றுமாசு அதிகிரித்துள்ள நிலையில்,பட்டாசு வெடிக்க தடைவிதிக்கபட்டது.தமிழகத்தில் பசுமை பட்டாசுகளை வெடிக்கவும், பட்டாசுகளை வெடிக்க நேர கட்டுப்பாடுகளை வெளியிட்டும் அரசு அறிவுறுத்தியது. பல இடங்களில் நேரக்கட்டுபாடுகள் மீறப்பட்டது.சென்னையில் நேற்று இரவு காற்றில் […]
காற்று மாசு காரணமாக ஹரியானாவில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு காரணமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் மட்டுமல்லாமல் பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. இதனை அடுத்து ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம், சோனிபட், பரிதாபாத் மற்றும் ஜஜ்ஜார் ஆகிய 4 மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக […]
டெல்லி:காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதன் காரணமாக டெல்லியில் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீண்டும் பள்ளிகள் மூடப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று மாசு மிக அதிக அளவில் இருந்தது. காற்றின் தரக்குறியீடு 382 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இது மக்களின் உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அந்த வகையில் வாகனங்கள் செல்வதற்கும், கட்டுமான பணிகள் […]
டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருந்தும் மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தியது ஏன் என உச்சநீதிமன்றம் டெல்லி அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று மாசு மிக அதிக அளவில் இருந்தது. காற்றின் தரக்குறியீடு 382 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இது மக்களின் உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அந்த வகையில் வாகனங்கள் செல்வதற்கும், கட்டுமான பணிகள் மற்றும் கட்டிடங்கள் […]
டெல்லியில் காற்று மாசு தொடர்வதால் பள்ளி, கல்லூரிகளை காலவரையின்றி மூட உத்தரவு வெளியாகியுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பிராந்தியங்களில் தேவையற்ற பயிர்க் கழிவுகளை விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்துவதாலும், சில தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினாலும் இதுவரை இல்லாத அளவுக்கு காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால் இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேவைப்பட்டால் டெல்லியில் உள்ள காற்று மாசை தடுக்க முழு […]
டெல்லி:காற்று மாசுபாட்டைக் குறைக்க வாகன நிறுத்த கட்டணங்களை நான்கு மடங்கு உயர்த்தலாம்,மெட்ரோ ரயில் சேவையை அதிகரிக்கலாம் என்று டெல்லி அரசு பல்வேறு யோசனைகளை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில் அதற்கு முக்கிய காரணம் தூசி, கனரக வாகன போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகள்’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.எனவே,அதனைக் குறைக்க 3 நாட்களுக்கு வாகன போக்குவரத்திற்கு ஏன் தடை விதிக்க கூடாது என்று டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும்,டெல்லியில் காற்று மாசுபாட்டிற்கு […]
டெல்லி:தலைநகரில் மாசு அளவைக் கட்டுப்படுத்த டெல்லியில் இரண்டு நாட்களுக்கு பொது முடக்கம் அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் மற்றும் அருகிலுள்ள நகரங்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக புகை மூட்டத்தில்(காற்று மாசுபாட்டில்) மூழ்கியுள்ளது.இதனால்,வாகன ஓட்டிகள் பகல் நேரத்திலேயே விளக்குகளை எரிய விட்டு செல்கின்றன.அங்கு நிலவும் காற்று மனிதர்கள் சுவாசிப்பதற்கு தகுதியானது அல்ல என்ற நிலையில் காற்றின் தரம் உள்ளது.இங்கு பல்வேறு இடங்களில் AQI எனப்படும் காற்றின் தரக்குறியீடு 400-யை தாண்டி […]
டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாக அங்கு டீசல் ஜெனரேட்டர்கள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆண்டுதோறும் காற்று மாசு அதிகரிப்பது ஒரு பெரும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. ஏனெனில், இதற்கு காரணம் அண்டை மாநிலங்களில் உள்ள விவசாய பயிர்களை எரிப்பதும், வாகனங்கள் வெளியிடும் புகையும் தான் என கருதப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக அம்மாநிலத்தின் சுற்றுச்சூழல் மந்திரி கோபால் ராய் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் பேசுகையில், காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்தும் விதமாக […]
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக ஒரு புகை கோபுரத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று திறந்து வைத்தா டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள பாபா கரக் சிங்கில் ஒரு புகை கோபுரத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று திறந்து வைத்தார். அதன்பின்னர்,பேசிய டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், “இது அமெரிக்க தொழில்நுட்பத்தை” பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது, இது மேலே இருந்து மாசுபட்ட காற்றை உறிஞ்சி, மாசுக்களை […]
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு, காற்றின் தரம் குறைவாக இருப்பதால், கருச்சிதைவுகள் ஏற்படும் அபாயம் அதிகம் என்று தி லான்செட் வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரத்தை மேம்படுத்துவது மூலம் கருச்சிதைவுகள் அபாயத்தை குறைக்க முடியும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தெற்காசியாவில் ஆண்டுக்கு 349,681 கருச்சிதைவுகள் ஏற்பட்டுப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் (WHO) நிர்ணயித்த ஒரு கன மீட்டர் காற்றில் (10 μg ) மைக்ரோ கிராம் நுண்துகள் இருக்கலாம் என தெரிவித்துள்ளது. […]
டெல்லியில் அதிகரித்து வரும் மாசு காரணமாக, காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அடுத்த வாரம் வரை டெல்லியில் இருந்து வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. சோனியா காந்தி கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து சுவாசிப்பதில் பிரச்சினை தொடர்ச்சியாக சிகிச்சைகள் எடுத்துக்கொண்டு வருகிறார். மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், சோனியா காந்தி வாரம் வரை டெல்லியில் இருந்து வெளியேற உள்ளதாகவும், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இன்று கோவா செல்கின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. கோவாவில் சோனியா […]
சென்னையில் கடந்தாண்டு தீபாவளியை விட இந்தாண்டு தீபாவளிக்கு காற்று மாசு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்றைய தினம் தீபாவளி பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடினர்.பல மாதங்களாக நாடையே உலுக்கிய கொரோனா வைரஸ் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது .ஆனாலும் மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று அரசு தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டிருந்தது . மேலும் ஒரு சில இடங்களில் காற்று மாசுபாடு காரணமாக பட்டாசுகளை விற்கவும்,வெடிக்கவும் தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. […]