சனிக்கிழமை ஃபதேபூர் சிக்ரி பகுதியில் திருமண விழாவிற்கு மணமகன் வீட்டாரை ஏற்றிச்சென்ற ஜீப் டிரக் மீது மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர்.
ஆக்ரா-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள கோரை சுங்கச்சாவடியில் அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. ராஜஸ்தானின் அஜ்மீரில் இருந்து மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் திருமண விருந்திற்காக காரில் பீகாரில் உள்ள பாட்னா நோக்கி சென்று கொண்டிருந்தனர்,அப்போது ஜீப் ஓட்டுனர் வாகனம் ஓட்டும் போது தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அப்பகுதி மக்கள் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மணமகன் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஜீப் டிரைவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று ஆக்ரா காவல் கண்காணிப்பாளர் (மேற்கு) சத்யஜீத் குப்தா பிடிஐயிடம் தெரிவித்தார்.