மேக வெடிப்பு... பெரிய விபத்து.. 16 பேர் பலி.. மீண்டும் தொடங்கியது அமர்நாத் புனித யாத்திரை...

அமர்நாத் யாத்திரை ஏற்கனவே விபத்து ஏற்பட்ட பாதை வழியே செல்ல தடைவிதிக்கப்பட்டு, மாற்று பாதையில் யாத்திரை இன்று முதல் தொடங்கியுள்ளது.

அமர்நாத் யாத்திரை ஏற்கனவே விபத்து ஏற்பட்ட பாதை வழியே செல்ல தடைவிதிக்கப்பட்டு, மாற்று பாதையில் யாத்திரை இன்று முதல் தொடங்கியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் அமர்நாத் புனித யாத்திரையில் ஈடுபட்டவர்கள்  விபத்தில் சிக்கி கொண்டானர். அமர்நாத் குகை அருகே, ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பலர் அதில் சிக்கினர்.

இதனால் இதுவரை 16 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 34 பேருக்கு காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருக்கின்றனர். மேலும், 30க்கும் மேற்பட்டோரை இன்னும் காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் புனித யாத்திரை இன்று தொடங்கப்பட்டுள்ளதாம். ஏற்கனவே விபத்து ஏற்பட்ட பால்டால் பகுதியில்  யாத்திரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாம். பஞ்சர்னி பகுதி வழியே தான் தான் அமர்நாத் யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.