அமர்நாத் யாத்திரை ஏற்கனவே விபத்து ஏற்பட்ட பாதை வழியே செல்ல தடைவிதிக்கப்பட்டு, மாற்று பாதையில் யாத்திரை இன்று முதல் தொடங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் அமர்நாத் புனித யாத்திரையில் ஈடுபட்டவர்கள் விபத்தில் சிக்கி கொண்டானர். அமர்நாத் குகை அருகே, ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பலர் அதில் சிக்கினர். இதனால் இதுவரை 16 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 34 பேருக்கு காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருக்கின்றனர். மேலும், 30க்கும் மேற்பட்டோரை இன்னும் […]
மோசமான வானிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டது அமர்நாத் யாத்திரை. ஜம்முவில் உள்ள பகவதி நகர் அடிப்படை முகாமில் இருந்து 5,982 யாத்ரீகர்கள் குழு இரண்டு கான்வாய் வாகனங்களின் துணையுடன் பள்ளத்தாக்குக்கு புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மோசமான வானிலை காரணமாக யாத்திரையில் ஈடுபட்ட “யாத்திரீகர்களில் 3,363 பேர் பஹல்காம் அடிப்படை முகாமுக்கும், 2,619 பேர் பால்டால் அடிப்படை முகாமுக்கும் செல்கின்றனர்” என்று அதிகாரிகள் அறிவித்தனர் . இந்நிலையில் இன்று(ஜூலை6) காலை வானிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, பக்தர்கள் பகலில் […]
அமர்நாத் யாத்திரையை குறிவைக்கும் பயங்கரவாதிகள். மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து, வரும் 21-ம் தேதி முதல் அமர்நாத் யாத்திரை துவங்கவுள்ளது. இந்நிலையில், இந்த அமர்நாத் யாத்திரையை பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாக ராணுவ அதிகாரி பிரிகேடியர் தாகூர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பயங்கரவாதிகள் அமர்நாத் யாத்ரீகர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாக எங்களுக்கு உளவு துறை வழியாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் அதனை முறியடிக்க திறனும், படைபலமும் உள்ளது என்று உறுதியுடன் கூறியுள்ளார். […]