டெல்லியின் புதிய முதல்வர் அதிஷி.! அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு.!

டெல்லியின் புதிய முதல்வராக அம்மாநில அமைச்சர் அதிஷியை , அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது பரிந்துரை செய்துள்ளார்.

Delhi CM Aravind Kejrival - Delhi Minister Atishi

டெல்லி :மதுபான வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டிருந்த மாநில டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த வெள்ளிக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் அளித்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதனால், ஜாமீன் வழங்கினாலும், டெல்லி முதல்வர் பதவியை தொடர முடியாத அளவுக்கு பல்வேறு நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்தது.

அதை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசிய டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் பதவியையே ராஜினாமா செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த நிலையில், தற்போது கல்வி துறை அமைச்சாரான அதிஷியை அடுத்த டெல்லி முதல்வராக பரிந்துரை செய்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.