டெல்லி : டெல்லி முதல்வர் பதவியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா செய்யவுள்ளார். இதனால், டெல்லியின் புதிய முதல்வராக மூத்த கல்வி அமைச்சர் அதிஷி மார்லெனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லியில் தற்போது நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிஷி மார்லெனா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். […]
டெல்லி : மதுபான வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டிருந்த மாநில டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த வெள்ளிக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் அளித்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதனால், ஜாமீன் வழங்கினாலும், டெல்லி முதல்வர் பதவியை தொடர முடியாத அளவுக்கு பல்வேறு நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்தது. அதை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசிய டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் பதவியையே ராஜினாமா செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த […]
டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் கடந்த மே 10ஆம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவால் இடைக்கால ஜாமீன் பெற்று இருந்தார். பின்னர் ஜாமீன் காலம் முடிந்து ஜூன் 2இல் திகார் சிறையில் சரணடைந்தார். இதனை அடுத்து, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அண்மையில், அமலாகாத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆனால், அதற்கு முன்னதகவே, […]
Jagadeep Dhankhar : இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிற்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை – துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை காவலில் உள்ளார். மாநில முதல்வர் கைது பற்றி அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் கேள்விகளை எழுப்பியிருந்தது. அதுபற்றி கருத்துக்கள் கூறியிருந்தது. மேலும், இதில் இந்திய பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் […]
Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இதுவரை 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். Read More – கெஜ்ரிவால் கைது..! வீட்டை சுற்றி 144 தடை.. டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு! மேலும், அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பு வழக்கு தொடர்ந்து […]
டெல்லியில் அமல்படுத்தப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான கொள்கையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில், இதுவரையில், டெல்லி அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் . ஸ்பெயின் பயணம் நிறைவு – நாளை சென்னை திரும்பும் முதலமைச்சர் ஸ்டாலின்! இதனை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரிக்கவும் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து அவருக்கு சம்மன் அனுப்பி வருகின்றனர். […]
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,சென்னை அண்ணா நூலகத்தை நூலகத்தை சுற்றிபார்த்துவிட்டு, அதனை பற்றி பாராட்டி நூலக பதிவேட்டில் எழுதிவிட்டு சென்றுள்ளார். சென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் இன்று தமிழக அரசின் ‘புதுமை பெண்கள்’ திட்டம் தொடங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்றார். சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் பங்கேற்றவுடன் அரவிந்த் கெஜ்ரிவால், சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு சென்றார். அங்கு […]
அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டம், நாளை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் 93 ஆயிரம் மாணவிகள் நடப்பு கல்வி ஆண்டில் பலன் பெற இருப்பதாக கூறப்படுகிறது. திட்டத்தின் துவக்க விழா, நாளை வட சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இத்திட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் […]
கோவாவில் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என கெஜ்ரிவால் அறிவித்தார். கோவாவில் உள்ள பனாஜியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால், கோவாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று கட்சி ஆட்சிக்கு வந்தால் இளைஞருக்கும வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ.3000 வேலையில்லா உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்தார். டெல்லி மக்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம்கிடைக்கிறது. […]
டெல்லியில் விளையாட்டு வசதிகள் சாதாரணமாக இயங்க அனுமதிக்கும் உத்தரவுகளை இன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெளியிட்டுள்ளது. முன்னதாக, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கான பயிற்சியளிப்பவர்களுக்காக அல்லது இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்காக அரங்கங்கள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் திறக்கப்பட்டன.இப்போது அரசாங்கம் ஒரு வழக்கமான அடிப்படையில் அவற்றைத் திறந்துள்ளது, ஆனால் பார்வையாளர்கள் இல்லாமல். நிலையான இயக்க நடைமுறை மற்றும் அரசாங்கத்தின் பிற வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிப்பது, மற்றும் கோவிட்-பொருத்தமான நடத்தைக்கு இணங்குதல் என்று தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் […]
பஞ்சாப் பொற்கோவிலில் பிரார்த்தனை செய்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பஞ்சாப் சென்றுள்ளார். அங்கிருக்கும் புகழ்பெற்ற அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார். பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. 177 தொகுதிகளை உடைய பஞ்சாபில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி போன்ற பல கட்சிகள் போட்டியிட உள்ளன. இந்நிலையில் டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாபில் ஆம் ஆத்மி […]
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்த ஊரடங்கு தளர்வுகள் நாளை முதல் அமலாகிறது. டெல்லி கொரோனா இரண்டாம் அலையால் பெருமளவு பாதிப்புகளையும், இழப்புகளையும் சந்தித்தது. அதன் காரணத்தால் டெல்லி முதல்வர் அங்கு ஊரடங்கை அமல்படுத்தினார். தற்போது அங்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை 200 ஐ அடைந்தது. அதன் காரணத்தால் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளார். இந்த தளர்வுகள் நாளை காலை 5 மணியிலிருந்து தொடக்கமாகும். இதில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள்: கடைகள், மால்கள் ஆகியவை காலை 10 மணி […]
டெல்லியில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 45 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு ஒரு மாதத்தில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த காரணத்தால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊரடங்கை அமல்படுத்தினார். தற்போது டெல்லியில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து (ஜூன் 7) இன்று தளர்வுகளை அறிவித்தார். மேலும், டெல்லியில் இருக்கும் மக்கள் பலர் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வருவதில்லை. இதனால் […]
தடுப்பூசிகளை டெல்லி அரசு விரைந்து செலுத்தி விடுவதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், அங்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது தடுப்பூசிகள் இல்லாத காரணத்தால் அங்கு தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் செய்தியாளர்களிடம் கூறுகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் […]
இந்திய தலைநகரான டெல்லியில் கடந்த சில மாதங்களாக கொரோனா காட்டுத்தீ போல் பரவிவந்தது,இதனால் உயிரிழப்பு அதிகரித்தது.அம்மாநில அரசு மேற்கொண்ட கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பாதிப்பு எண்ணிக்கையை குறைத்துள்ளது. இதனையடுத்து டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்திற்கும் குறைவாக கொரோன பாதிப்பு பதிவாகியுள்ளது, அங்கு கொரோனா புதிய பாதிப்பு எண்ணிக்கை 1,568 ஆக பதிவாகியுள்ளது, மேலும் 156 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,565 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையிலான கொரோனா மொத்த பாதிப்பு […]
மே 31-ம் தேதி வரை முழு ஊரடங்கை நீடித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், பல மாநிலங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிற நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பொது முடக்கம் அமலில் இருக்கிறது. இந்த நிலையில், நாளை காலை 5 மணியுடன் பொது முடக்கம் முடியவுள்ளது. இதனையடுத்து, மே 31-ம் […]
அடுத்த மூன்று மாதங்களில் டெல்லி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட கூடிய வகையில் மாதத்திற்கு 85 லட்சம் வழங்க வேண்டும். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி தேவையான தடுப்பூசி அளவை கிடைக்கப் பெற்றால் 2.6 கோடி தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றால் மூன்று மாதங்களுக்குள் டெல்லி அரசால் தடுப்பூசி போட முடியும் என தெரிவித்துள்ளார். டெல்லியில் 18 வயதிற்கும் மேல் சுமார் 1.5 கோடி மக்கள் உள்ளனர். அந்த கணக்கீட்டின்படி, இந்த 1.5 கோடி மக்களுக்கும் தடுப்பூசி […]
இந்தியா முழுவதும் கொரோனாவுக்கான தடுப்பூசி இன்று தொடக்கப்ட்டுள்ளது.அவசர கால அனுமதியாக ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவாக்சின் மற்றும் புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு என்ற இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.அதன் பின்பு பேசிய கெஜ்ரிவால் தடுப்பூசி தொடர்பான வதந்திகளுக்கு மக்கள் செவிசாய்க்க வேண்டாம் என்றும் “தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்,” என்று கூறினார். மேலும் எல்.என்.ஜே.பி […]
பறவைக்காய்ச்சல் எதிரொலி காரணமாக டெல்லி மாநிலத்திற்குள் உயிருடன் இருக்கும் கோழி மற்றும் பறவைகளை கொண்டுவர தடை விதித்து, அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கேரளா உட்பட சில மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் தீவிரமாக பரவிவரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து கோழி இறக்குமதிக்கு தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பறவை காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா வகை “A” வைரஸ்களால் ஏற்படும் வைரஸ் தொற்று நோயாகும். மேலும், பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க பல முன்னெச்சரிக்கை […]
உலக நாடுகள் பேசும் வகையில் டெல்லியில் கொரோனோ வைரஸின் தாக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து கொண்டே வந்தது. அந்தவகையில் இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியின் பொருளாதாரத்தை வளர்க்கும் விதமாக, காணொளி மூலம் வார்த்தைகளிடையே ஆலோசனை நடத்தினார். அப்பொழுது அவர், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தலைநகர் டெல்லி முன்மாதிரியாக இருப்பதில் மகிழ்ச்சி என தெரிவித்த அவர், உலக நாடுகள் பேசும் […]