மத்திய பிரதேசத்தில் 19 வயது மதிக்கத்தக்க ரமேஷ்வர் சிங் என்ற இளைஞர் சாலையில் ஷூ அணியாமல் வெறுங்காலில் 100 மீட்டரை 11 வினாடியில் கடந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிக்கை ட்விட்டரில் பதிவிட்டது.
இதை பார்த்த மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் உடனடியாக ரீ ட்வீட் செய்தார். இது போன்ற திறமை கொண்ட இளைஞர்களை அடையாளம் கண்டு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ஊக்குவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
unknown nodeசிவராஜ்சிங் சவுகான் பதிவை பார்த்த விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ,அந்த இளைஞரை தன்னிடம் அழைத்து வரும்படியும் தடகள அகடாமில் சேர்க்க ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். இந்த திறமைமிக்க இளைஞரை மத்தியபிரதேசத்தின்“உசேன் போல்ட்”என கூறுகின்றனர்.